பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 , திருவாசகம் சில சிந்தனைகள்-5 பண் முறையில் இசைக்கும் தாளத்திற்கும் மிக முக்கியமான இடமுண்டு. Ε.!6ί) இடங்களில் இசையமைப்பிற்கு ஏற்பச் சொல்லை அமைக்கவேண்டிய நிலை உருவாகிறது. இவற்றையல்லாமல் திருத்தாண்டகம், திருக்குறுந்தொகை திருவிருத்தம் தவிர ஏழு திருமுறைகளிலுள்ள பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் இசைப் பாக்களே யாகும். சுந்தரருடைய தக்கேசிப் பண்கள் சுத்தாங்கமாகப் பாடப்படலாமேனும் அவை அடிப்படையில் இசைப் பாக்களே யாகும். அன்றியும் தேவாரங்களை ஊன்றிப்படித்தால் இந்தப் பண் அமைப்புக்களுக்கேற்பச் சொல் அமைப்புகளும் இடம்பெற்றிருத்தலைக் காணலாம். ஒரு குறிப்பிட்ட ஊரில், ஒரு குறிப்பிட்ட பண்ணில் இப்பெருமக்கள் பாடினார்கள் என்றால் எந்தப் பண்ணை உபயோகப்படுத்தவேண்டுமென்று எப்படி அவர்களுக்குத் தெரிந்தது? நடுவுநிலைமையில் நின்று சிந்தித்தால் ஒரு முக்கியமான உண்மையைக் காணமுடியும். பெரும்பாலான பாடல்களில் அந்தந்த ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. புறம்பயம் என்ற இரு சீரில் வரும் ஊர்ப் பெயர் தொடங்கிப் பழமண்ணிப்படிக்கரை என்ற பல சீர்களையுடைய ஊர்ப்பெயர்வரை ஊர்ப் பெயர்கள் அமைந்துள்ளன. - ஒரு பதிகத்தின் பல பாடல்களில் அந்த ஊரின் பெயர் இடம்பெற வேண்டுமானால் அதற்கு ஏற்பச் சொல்அமைப்பு அமையவேண்டும். இந்தக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, எந்த இராகத்தில் அல்லது பண்ணில் சொல் உடையாமல் பாடலாம் என்பதை இந்த அருளாளர்கள் விநாடி நேரத்தில் கண்டுகொண்டனர். ஆகவே, தேவாரங்கள் பண்முறையில் அமையப் பொருத்தமாக இருந்தன.