பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திருவாசகம் சில சிந்தனைகள்-5 இருந்தமை ஒர் அற்புதம். இதனையே பொன் அடி இணைகாட்டி மெய்யனாய் வெளிகாட்டி முன்நின்றது ஓர் அற்புதம் (569) என்றும், பொன் கழல் இணைகாட்டி வேந்தனாய் வெளியே என்முன் நின்றது ஒர் அற்புதம் (570) என்றும் பாடியுள்ளார். இவை முதல் வகை அற்புதத்தைச் சேர்ந்தவை. - எஞ்சியுள்ள ஏழு பாடல்களும் இரண்டாவது வகை அற்புதத்தைப்பற்றிப் பேசுகின்றன. உதாரணமாக, 'அருந்துணைவனாய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம்’ (572) என்றும், கழல்காட்டி அறிவு தந்து எனை ஆண்டுகொண்டருளிய அற்புதம் (578) என்றும் கூறுவதைக் d$T&tföTöl)fTLí). இரண்டாவது வகை அற்புதத்தில் ஒன்றுக்கும் உதவாதவராகிய தம்மை ஆண்டுகொண்டது அற்புதம் என்கிறார். அதைவிட அற்புதம் என்னவென்றால் ஆண்டு கொண்டதோடு நில்லாமல், முன்னரே ஆண்டுகொள்ளப் பெற்ற அடியார்களிடையே அமருமாறு செய்தமை ஆகும். 569, மையல் ஆய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டுத் தையலார் எனும் சுழித்தலைப் பட்டு நான் தலை தடுமாறாமே பொய் எலாம் விடத் திருவருள் தந்து தன் பொன் அடி இணை காட்டி மெய்யன் ஆய் வெளி காட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே இப்பதிகத்தில் வரும் பத்துப் பாடல்களில் மூன்றாம் (57) எட்டாம் (576) பாடல்கள் தவிர எஞ்சிய எட்டுப் பாடல்களிலும் காம வான்சுறவின் வாய்ப்பட்ட தம்மையும் ஏற்றுக்கொண்டதை அற்புதம் அற்புதம் என்று பேசிச் செல்கின்றார்.