பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340-திருவாசகம் சில சிந்தனைகள்-5 தில்லைக்கூத்தன் ஆகிய மூன்றையும் தனியே பிரித்துக் காண்டல் கடினம். பாடிய அடிகளாரும், பாடு பொருளாகவுள்ள இறைவனும், திருத்தசாங்கம் போன்ற சிலபாடல்கள் தவிர ஏனைய பாடல்களுள் மறைந்து விடுகின்றனர். ஆதலால், திருவாசகப் பாடல்கள் ஏனைய பக்திப் பாடல்களைப்போல் அல்லாமல் தனித்து விளங்குகின்றன. இப்பாடல்களில் சொல், சொல் தரும் பொருள், அப்பொருள் தோற்றுவிக்கும் உணர்வு என்ற முறையில் தொடங்கி, சொல்லும் பொருளும் மறைந்து உணர்வு ஒன்று மட்டுமே நின்றுவிடுகிறது. இதுவே திருவாசகத்தின் தனிச்சிறப்பாகும். சொல்லையும் அது குறிக்கும் பொருளையும் புரிந்து கொண்டுதான் இந்த உணர்வைப் பெறவேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. தொடக்கத்தில் இந்த உணர்வைத் தோற்றுவிக்கச் சொல்லும் அதன் பொருளும் பயன்பட்டிருக்கலாம். ஆனால், அடுத்தடுத்த முறைகளில் சொல்லும் பொருளும் மறைய உணர்வு ஒன்றே எஞ்சி நிற்கிறது என்பதை அறிவு கொண்டு அறியமுடியா விட்டாலும் உணர்வு கொண்டு உணர்ந்துகொள்ளமுடியும். இந்த அடிப்படையை நன்கு உணர்ந்துகொண்ட வள்ளற் பெருமான் வாட்டமிலா மாணிக்க வாசக’ என்று தொடங்கும் பாடலில் மிகப் புதுமையானதும் சிந்திக்க வேண்டியதுமான ஒரு கருத்தை வெளியிடுகிறார். அப்பாடலில் “நின் வாசகத்தைக் கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா'விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் எனில் இங்கு நான் உறுதல் வியப்பன்றே (திருவருட்பா - 3266) என்று பாடியருளினார். உயிரினங்களில் கீழ்ப்பட்டதாகக் கூறப்படும் பறவைகளும் வேட்டையாடும் விலங்குகளும் திருவாசகப் பாடல்களைக் கேட்டால் மெய்ஞ்ஞான நாட்டமுறும்