பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 341 என்று கூறுகிறாரே, இதன் அடிப்படையென்ன? விலங் களும் பறவைகளும் சொல்லையும் சொற்பொருளையும்' புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையவனவல்ல. இந்த ஆற்றல் மனிதன் ஒருவனுக்கே உரியதாகும். பறவை முதலிய விலங்கினங்கட்குச் சொல்லைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இன்றேனும் உணர்வைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மனிதனைவிட அதிகமுண்டு. தம்மை வளர்ப்பவன் வாய் விட்டு ஒரு வார்த்தையும் பேசாதபோதுகூட அவன் மனத்தில் நிறைந்திருக்கும் அன்பு, அதிர்வுகள்ாகப் புறப்பட்டுச் சென்று எதிரேயுள்ள பிராணிகளை ஈர்க்கின்றது. உணர்வைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உண்டு என்பதை நாம் அறிவோம். திருவாசகப் பாடல்கள் முழுவதும் சொல்லையும் பொருளையும்விட உணர்வே வடிவாக இருத்தலின் அதனைக் கேட்கின்ற விலங்கினங்கள் கூட அவற்றின்பால் ஈடுபடும் என்கிறார் வள்ளலார். இதனைப் புரிந்துகொண்டால் இப்பாடல்களுக்குரிய தனிச்சிறப்பு நன்கு விளங்கும். இதனையே பாடுபவர், பாடல், பாடுபொருள் என்ற மூன்றாக இருந்தநிலை மாறிப் பாடுபவரும் பாடுபொருளும் பாடலுக்குள் மூழ்கிவிட்டனர் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். திருவாசகப் பாடல்களில் காணும் சில புதுமைகள் அடிகளாரைப் பொறுத்தவரையில் மானிட வடிவிலிருந்த குருநாதர் தரிசனத்தில் தொடங்கி உமையொருபாகன், தில்லைக்கூத்தன் என்ற பல்வேறு வடிவங்களை நேரே கண்டு தரிசித்தவர் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். ஏனைய அருளாளர்களைப்போலவே இம்மூர்த்தங்களையல்லாமல், உண்மையான சொரூபத்தைக் கண்டு அடிகளாரும் வழிபட்டவராவார். ஆனால், இறைப்பிரேமையில் மூழ்கியெழுந்து, இந்தப் பிரேமையில் தாம் பெற்ற அனுபவத்தை அடிகளார்ப் போல வேறு