பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342--திருவாசகம் சில சிந்தனைகள் 5 யாரும் பாடவில்லை. வாதவூரர் மணிவாசகராக மாறிய விநாடியிலிருந்து, அச்சோப் பதிகம் பாடுகின்றவரையில் பெருவளர்ச்சி அடைகின்றார் என்பதை அறியமுடிகிறது. திருவாசகம் இன்று பதிக்கப் பெற்றுள்ள முறையில் எந்தப் பகுதி முன்னர்ப் பாடப்பட்டது, எதனையடுத்து எது பாடப்பெற்றது, குறிப்பிட்ட பதிகம் எந்த ஊரில் பாடப்பட்டது என்பதை அறிந்துகொள்ளல் கடினமாகும். பெரும்பகுதிப் பதிகங்களுக்குத் தில்லையில் அருளியது. என்று குறிப்பைத் தந்திருக்கிறார்கள். உரையெழுதிய பெருமக்களும் இதுபற்றிச் சிந்தித்ததாகத் தெரியவில்லை. முழுவதும் திருப்பெருந்துறைபற்றிப் பாடும் இருபத்தி ரண்டாவது பதிகத்தை கோயில் திருப்பதிகம்' என்று பெயரிட்டு தில்லையில் அருளியது என்று கூறியது ஏதோ குருட்டுத்தனமாகத் தலைப்புத் தந்தமையை அறிவிக்கின்றது. இந்த அமைப்பு முறை பற்றிப் பின்னர் விரிவாகக் &#5/T6ððs (SA)fT|{f}. அடிகளார் பாடியருளிய முறைவைப்பு உண்மையாகத் தெரியுமானால், திருவடி தீட்சையிலிருந்து அச்சோப் பதிகம் பாடுகின்றவரையுள்ள நாட்களில் அவர் எத்தகைய வளர்ச்சியை அடைந்தார் என்பதை அறிய வாய்ப்பு உண்டு. திருவாசகத்தைத் தொகுத்தவர்கள் உண்மையறிய வாய்ப்பின்மையின், பாடல்களின் வகை, பாடல்களின் எண்ணிக்கை என்பவற்றை வைத்து இதனைத் தொகுத்துவிட்டனர். இதையும்கூடச் செம்மையாகச் செய்ததாகத் தெரியவில்லை. திருவெம்பாவை முதல் திருவுந்தியார்வரை ஒவ்வொன்றும் இருபது பாடல்களைக் கொண்டதாகும். அதற்குப்பின் வரும் தோள் நோக்கத்தில் பதினான்கு பாடல்களே உள்ளன. அடுத்துவரும் பொன்னூசலில் ஒன்பது பாடல்களே உள்ளன. இது இறங்குமுறைவைப்பு என்று ஏற்றுக்கொண்டால், அடுத்துவரும் அன்னைப் பத்து முதல் அச்சோப் பதிகம் வரை பாடல்களின் எண்ணிக்கை ஒன்பதிலும்