பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை ல் 343 குறைந்துகொண்டே சென்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறில்லை. இதனைச் சிந்திப்பதற்கு ஒரு காரணம் உண்டு. இறைப்பிரேமையில் ஆழங்காற்பட்டுப் பெரும் பொழுதைச் செலவழித்த அடிகளார், எல்லா இடங்களிலும் எல்லாப் பொருள்களிலும் இறைவனைக் காணுகின்ற வாய்ப்பைப் பெற்றிருந்தார். அப்படியிருந்தும் திருமால், நான்முகன் என்பவர்களைக் குறைத்துப்பேசும் பழக்கம் மிகப் பல பாடல்களில் இருப்பதைக் காணமுடிகின்றது. அதிலும் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் அடிமுடி தேடிய கதையே பேசப்பெறுகிறது. திரிபுரம் எரித்த கதை, தக்கன் வேள்விக் கதை என்பவை ஆங்காங்கே பேசப்பெற்றாலும் அக்கதைகளில் பிற தெய்வங்களைக் குறைத்துப்பேசும் செய்தியொன்றும் இல்லை. ஆனால் 'அடிமுடி தேடிய கதை'யில் நாரணன் நான்முகன் இருவரும் தேவர்கள் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பாடல்கள்தோறும் இதை விடாமல் கூறவேண்டிய காரணமென்ன? இறைப்பிரேமையில் மூழ்கியிருந்த நேரம் போக ஏனைய நேரங்களில் மணிவாசகர் திருவாதவூரராகவே இருந்தார்போலும், அக்காலத்தைய தாக்கம் அவரையும் ஆட்கொண்டுவிட்டது என்று கூறுவது ஒருவகை. இதனையல்லாமல் மனோ தத்துவ ரீதியாகவும் ஒரு விளக்கத்தைக் கூறலாம். அடிகளாரைப் பொறுத்தமட்டில் குருநாதரே உமையொருபாகன். அவரே தில்லைக்கூத்தன் என்பதை உடனே விளங்கிக்கொண்டார் என்றாலும் குருநாதரைவிட அவருடைய திருவடிகளே அடிகளாரின் மனத்தில் நிரம்பியிருந்தது. இதற்கு விளக்கம் தேடி அதிக தூரம் செல்லவேண்டியதில்லை. குருநாதருடைய முழுவடிவைச் செந்தழல் புரைதிரு மேனியும் காட்டி என்றும், அந்தணன் ஆவதும் காட்டி என்றும், திருப்பள்ளியெழுச்சியில் (375) பாடியதுடன், குயிற்பத்தில்