பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344- திருவாசகம் சில சிந்தனைகள் 5 அந்தணனாகி வந்து (357) என்றும் ஒரோவழிப் பாடியுள்ளமை நோக்கற்குரியது. ஆனால், திருவடியைப்பற்றி நூற்றுக்கணக்கான பாடல்கள் பேசுகின்றன. குருநாதர் வடிவைப்பற்றிப் பேசும் குயிற்பத்தின் மேற்சொன்ன பாடலடியிற்கடிடச் சேவடி காட்டி என்றுதான் முடிக்கின்றார். இந்த அளவிற்குச் சேவடியில் ஈடுபட என்ன நிகழ்ந்தது என்பதைச் சிந்திப்பது நலம். அமைச்சர் குதிரையினின்றும் இறங்கியவுடன் அவருடைய கண்களில் முதலில் பட்டது குருநாதர் வடிவமன்று; புவனியில் தீண்டிய சேவடியே யாகும். அன்றியும் இவர் கீழே வீழ்ந்து வணங்கியவுடன் குருநாதர் திருவடி தீட்சை செய்தார், அடுத்த விநாடியே மணிவாசகர் தோன்றுகிறார். உறக்கத்தில் கடைசியாக இருந்த நினைவு விழிக்கின்ற காலத்தில் முதலாவதாகத் தோன்றும் என்று கூறுதல் மரபு. அந்த முறையில் திருவாதவூரர் என்ற அமைச்சருக்குக் கடைசியாகத் தோன்றிய காட்சியும் நினைவும் குருநாதரின் திருவடிகளே யாகும். திருவாதவூரர் மறைந்து, மணிவாசகர் தோன்றியவுடன் தம்மை உய்வித்து மணிவாசகர் என்ற புதுப் பிறவியைத் தந்த திருவடியே காட்சியாகவும் நினைவாகவும் முதலில் நிற்கின்றது. ஆகவேதான் குருநாதரைவிட, தில்லைக்கூத்தனைவிட, அத் திருவடிகள் அவருக்கு மிக முக்கியமானவையாய் அமைந்துவிட்டன. இவ்வளவு துாரம் திருவடியில் ஈடுபடும் பொழுதெல்லாம். அத்திருவடி எவ்வளவு உயர்ந்தது என்பதும் அது எவ்வளவு எளிதாகத் தமக்குக் காட்சி தந்தது என்பதும், எவ்வளவு எளிதாகத் தம் கைகளால் பற்றிக்கொள்ள முடிந்தது என்பதும் அவருடைய மனத்தில் நிறைந்திருந்தது. இந்த நினைவு தோன்றும்போதெல்லாம் தொடர்புடைப் பொருளைச் சிந்தித்தல் (association of ideas) இயல்பாகிறது. தமக்கு எளிதாகக் கிடைத்த அத்திருவடி