பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை_345 நாரணனுக்கும் நான்முகனுக்கும் கிட்டாமல்போனது அவருக்குப் பெருவியப்பைத் தருகிறது. அதனாலேயே ஓயாமல் பல பாடல்களில் அவர்கள் இருவரும் காணாத் திருவடி என்று பேசிச்செல்கிறார். இப்பொழுது சிலர் மனத்தில் இயல்பான சில ஐயங்கள் தோன்ற இடமுண்டு, திருவாசக பக்தரான ஜி.யு.போப்பும் திருவாசகம் பற்றி ஆராய்ச்சியுரை எழுதிய யோக்கம் (Yocum) என்ற மேலை நாட்டவரும், திருமாலை மற்றொரு சமயத்தின் முழுமுதற் பொருள் என்று அடிகளார் ஏற்றுக்கொள்ளவில்லையாதலால் அவர் வளர்ச்சி முழுத்தன்மை பெற்றதன்று; குறைபாடுடையது என்று கூறிப்போயினர். இவ்விருவருடைய கூற்றும் சற்றும் பொருத்தமற்றதேயாகும். கத்தோலிக்கப் பாதிரியாரான ஜி.யு.போப்பும், யூதரான யோக்கமும் முறையே புராடெஸ்டன்ட்டைகளையும் (protestants) ஏனைய கிறிஸ்தவர்களையும் தங்களுக்குச் சமமானவர்கள் என்று ஏற்றுக் கொள்வார்களா? எனவே, அடிகளார் பாடலைக் கொண்டு அவர் முழுவளர்ச்சி அடையாதவர் என்று கூறுவது அறியாமையின் விளைவேயாகும். - மனிதராகிய தம்மால் காணக்கூடிய திருவடி தேவர்களிலும் மேம்பட்ட திருமாலுக்கும் காட்சி தரவில்லை என்று கூறும்போது, திருவடியின் கருனைப் பெருமை அடிகளார் மனத்தில் நிறைந்திருக்கிறதேயொழிய, திருமாலைப்பற்றிய உயர்வு தாழ்வு நினைவு அடிகளார் உள்ளத்தில் இல்லை. இந்த நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளாவிட்டால் திருவாசகத்தின் மிகப் பல இடங்களில் வரும் இக்கதையின் அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியாது. அடிகளாரின் மனவியல்பற்றிய ஒரு பிரச்சினையாகும் இது எளிதாகக் காட்சிக்கு எட்டிய திருவடியை நினைக்கும்போதெல்லாம் திருவடியோடு தொடர்புடைய அடிமுடிதேடிய கதை நினைவிற்கு வருகிறது.