பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை இதுவரை வெளிவந்துள்ள திருவாசகப் பதிப்புகள் அனைத்தும் பதிகங்கள் வைப்புமுறையில் ஒரேமுறையைப் பின்பற்றி வந்துள்ளன. அவை ஏன் அவ்வாறு அமைக்கப்பட்டன என்பதுபற்றி அறிய எவ்வித வாய்ப்பும் இல்லை. பிற்காலத்து உரையாசிரியர்கள் பலரும் பாடல்களின் வகை, எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டன என்று கூறியுள்ளனர். அதாவது, நான்கு அகவல்கள், அடுத்து நூறு பாடல்களைக் கொண்ட சதகம், பின்னர் ஐம்பது பாடல்கள் கொண்ட நீத்தல் விண்ணப்பம், அடுத்து இருபது பாடல்கள், பத்துப்பாடல்கள் என்ற முறையில் இவை வைக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த விளக்கமும் சரியென்று தோன்றவில்லை. அடிகளார் எந்தப் பதிகத்தை எங்கே எப்போது பாடினார் என்று அறிய வாய்ப்பே இல்லை. அடிகளார் வரலாற்றை முழுமையாகச் சொல்வதற்காக எழுந்த திருவாதவூரடிகள் புராணம் குழப்பத்திற்கு ஒரு கொள்கலம் என்று சொன்னால் மிகையாகாது. இதனைப் பாடிய கடவுண்மாமுனிவர் சிறந்த சிவபக்தர், மணிவாசகரிடம் பேரன்பு பூண்டவர் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. ஒரு வரலாற்றைப் பாடலாகப் பாடவேண்டுமானால் பல்வேறு விவரங்களையும் முதலில் தொகுத்துக்கொள்ள வேண்டும். அந்த வரலாற்றுக்குரியவர் எங்கெங்கே எப்பொழுது சென்றார், என்ன பாடினார் என்ற வரிசைமுறையைச் சேக்கிழார் பெருமான்போல நன்கு அறிந்திருக்க வேண்டும்.