பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 திருவாசகம் சில சிந்தனைகள்-5 அம்மானை, தெள்ளேணம், உந்தி என்பவை மகளிர் விளையாடிய விளையாட்டுக்களின் பெயர்களாகும். அந்த விளையாட்டுகளின் அடிப்படையில் அடிகளார் பாடல்கள் பாடியுள்ளார். அப்படியானால் 'திரு'வை எப்படி எங்கே சேர்ப்பது? அம்மானைத் திருப்பாடல்கள், தெள்ளேனத் திருப்பாடல்கள், உந்தியார் திருப்பாடல்கள் என்று தலைப்பிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு அம்மானைக்கும், தெள்ளேணத்துக்கும், உந்திக்கும் திருவைச் சேர்ப்பது பொருத்தமுடையதா என்பது சிந்திப்பதற்குரியது. தும்பி என்பது ஒருவகை வண்டுக்குரிய பெயர். அதில் அரச வண்டு இருக்குமேயானால் அதனைக் கோத்தும்பி என்று சொல்வதில் தவறில்லை. ஆனால், எந்த அடிப்படையில் கோத்தும்பிக்குத் திருவென்று அடை தரப்பெற்றது? எல்லாவற்றிற்கும் திருவைச் சேர்க்கவேண்டும் என்று கருதியிருந்தால் திருக்குயிற்பத்து என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? இதேபோல, சற்றும் பொருத்தமில்லாத முறையில் திருவைச் சேர்த்த சில தலைப்புகளும் உண்டு, திருப்புலம்பல், திருஏசறவு, திருவெண்பா இதற்கு உதாரணங்களாகும். இவற்றையெல்லாம் ஆழ்ந்து சிந்தித்தால், பதிகத்தில் கிடைக்கும் சொல்லை வைத்துக்கொண்டு, பதிகத்திற்குத் தலைப்பிடுவது சிறந்த முறை என்று தோன்றுகிறது. அப்படி இல்லையானால், முதற்பாடலில் முதலடியில் வரும் ஒரு தொடரைத் தலைப்பாக வைக்கும் பழக்கம் தொன்று தொட்டே இருந்துவருகின்றது. இடைக்காலத்தில், இத்தலைப்புகள் இட்டவர்கள் இதனையும் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் பண்டாய நான்மறை என்ற தலைப்பு. பொருத்தமுடைய தலைப்புக்கள் பெற்றுள்ள பதிகங்கள் போக, எஞ்சியவற்றிற்கு அந்த அந்தப்