பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 0-திருவாசகம் சில சிந்தனைகள்-5 இனி அடுத்தபடியாகக் காணவேண்டியது இப்பதிகங்களின் வைப்புமுறையாகும். நூறு, ஐம்பது, இருபது, பத்து என்ற முறையில் கோவை செய்தது பொருத்தமற்றது என்று தோன்றுகிறது. ஆதலின் இதுபற்றிய ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, இந்த வைப்புமுறையை மாற்றி, எந்தப் பதிகத்தின் முன் எந்தப் பதிகம் வந்தால் பொருத்தமாக இருக்கும் என்ற நினைவுடன் பின்காணும் வரிசைமுறையில் மாற்றியமைக்க முயன்றுள்ளேன். அடிகளார், திருப்பெருந்துறையில் திருவருளை முழுவதுமாகப் பெற்றது தொடங்கி அவர்பெற்ற இறையனுபவம் வளர்ந்துவளர்ந்து இறைப்பிரேமையாக எவ்வாறு வடிவெடுக்கிறது என்ற சிந்தனையின் பயனாக விளைந்ததே அடியிற் காணும் தொகுப்புமுறை. திருவாசகம் முழுவதையும் அடியிற் காணும் 13 தொகுப்புகளில் பிரிக்கலாம் என்பதே இம்முயற்சியின் முதற்படி பதிக வைப்பு முறை இன்றுள்ள திருவாசகப் பதிப்புகளில் காணப்பெறும் பதிக எண்கள் அடைப்புக் குறிக்குள் தரப்பெற்றுள்ளன. 1. இணையாத பாடல்கள் 1) திருத்தசாங்கம் (19) 2) அச்சப்பத்து (35) 3) திருப்படையாட்சி (49) II. நீத்தல் விண்ணப்பம் 1) நீத்தல் விண்ணப்பம் (6)