பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354-திருவாசகம் சில சிந்தனைகள்-5 அமையவில்லை. ஒரு கருத்து ஒரு பதிகத்தில் பேசப்பெற்று மற்றொரு பதிகத்தில் அதே கருத்து வளர்ச்சிபெற்று வருவதைக் காணலாம். ஆனால் இப்போதுள்ள வைப்பு முறையில் இவ்விரண்டு பதிகங்களும் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன. வேறு கருத்துக்களைப் பேசும் பதிகங்கள் இடையே அமைக்கப் பெற்றுள்ளன. அதனாலேயே ஒத்த கருத்துடைய பாடல்களை ஒன்றாகச் சேர்க்கும் முறையில் இத்தலைப்புகளுள் அப்பதிகங்களைத் தொகுக்க முயன்றுள்ளேன். இங்கு காணப்பெறும் ஒவ்வொரு தொகுப்பினுள்ளும் இருக்கும் பதிகங்களில் முன்னர்ப் பாடப் பெற்றவை ζΤώσύΥΦΥ) பின்னர்ப் பாடப்பெற்றவை எவை என்றோ எங்கே பாடப்பெற்றவை எவை என்றோ தோன்றும் வினாக்களுக்கு இத்தொகுப்பு விடை தராது. இந்த வைப்புமுறை சரியென்றோ இதனைப் பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றோ நான் நினைக்கவும் இல்லை; சொல்லவும் இல்லை. எனது 85 வயதில் திருவாசகம் காட்டும் திருநெறி இதுவாகும். இன்னும் சில ஆண்டுகள் உயிருடன் இருப்பின் நானேகூட இந்த முறைவைப்பை மாற்றும் நிலைக்கு ஆளாகலாம். இது முடிந்த முடிபென்று யாரும் நினைக்கத் தேவையில்லை. மூடிய பெட்டிக்குள் திருவாசகம் என்ற நூலை வைத்துவிட்டுத் துபதீபம் காட்டி அமைதியடையும் நிலை இந்த வளரும் சமுதாயத்திற்கு ஏற்றதன்று. சைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல், மனித சமுதாயம் முழுவதுக்கும் இன்றைக்குமட்டு மல்லாமல், இனி வரப்போகும். எந்த நூற்றாண்டுக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது திருவாசகம். இதனைப் படிக்கின்றவர்கள் தம்முடைய கலக்கமடைந்த வாழ்விற்கு ஒரு வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்கம் என்று இதனைக் கருதுவர்.