பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_355 இப்பாடல்களில் காணப்பெறும் சிவன் என்ற சொல்லிற்குப் பதிலாக, இறைவன் என்ற பொதுப்பெயரைத் தந்துவிட்டால், இந்த உலகத்திலுள்ள எல்லாச் சமயத்தாரும் இதனைப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வர். இந்த அடிப்படையை மனத்துட்கொண்டு, மேலே கூறிய 13 தலைப்புக்களில் இப்பாடல்களைப் பிரித்துத் தொகுக்க முயன்றுள்ளேன். 1. இணையாத பாடல்கள் மேலே காட்டப்பெற்றுள்ள 13 தலைப்புக்களில் முதலாவதாக உள்ளது இணையாதபாடல்கள் என்பதாகும். இந்த தலைப்பு சிலருக்குக் குழப்பத்தைத் தரலாம். திருவாசகத்தில் காணப்பெறும் 5 பதிகங்களில் அந்நூலின் திரண்ட பொருளுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல், மூன்று பதிகங்கள் அமைந்துள்ளன. அவையாவன: 1. திருத்தசாங்கம் (19) 2. அச்சப்பத்து (35) 3. திருப்படையாட்சி (49) இம் மூன்றனுள் திருத்தசாங்கம் எவ்விதத்திலும் திருவாசகப் பாடல்களோடு இணையாது நிற்கின்றது. அச்சப் பத்து அடிகளார் காலத்தில் வீறுடன் பரவிய மாயாவாதம், வைணவம் என்ற சமயங்களையும் அதனைப் பின்பற்றுபவர்களையும் மறுத்துப் பேசுகிறது. அடிகளாரது நிலையை அடைந்து விட்டவர்களை அச்சமென்பது நெருங்கவே இயலாது. அப்படியிருந்தும் 'அம்ம நாம் அஞ்சுமாறே என்று பாடுகிறார் என்றால், அதில் ஏதோ: ஆழமான கருத்து இருக்க வேண்டும். பிற சமயவாதிகளைச் சுட்டுகிறார் என்பதைக் காட்டிலும் சைவசமயத்தில் உள்ள