பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356-திருவாசகம் சில சிந்தனைகள்-5 போலிகளைமனத்தில் நினைந்தே இதனைப் பாடுகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. அது எவ்வாறாயினும் திருவாசகத்தின் போக்கிற்கு அச்சப் பத்து பொருந்துவதாகத் தெரியவில்லை. மூன்றாவதாக உள்ளது திருப்படையாட்சி என்பதாகும். இதற்கு வாலாயமாகக் கூறும் பொருளை ஒதுக்கிவிட்டு, படை ஆட்சி என்பது பொறிபுலன்களை ஆள்வதாகும் என்ற முறையில் பொருள் கூறியுள்ளோம். இறைவன் வெளிப்பட்டால் இப்பொறிபுலன்கள் அவன்பால் ஈடுபடவேண்டும்; இன்றேல் இன்னல்களையே அடைய நேரிடும் என்பது இப்பகுதியின் திரண்ட பொருளாகும். இப்பதிகம் திருவாசகப் போக்கிற்கு முழுவதும் ஏற்புடையது அன்று ஆயினும், ஒரளவு பொருத்தமென்றே கூறவேண்டும். ஆகையால்தான் இதனை இத்தொகுப்பில் இறுதியாக வைத்துள்ளேன். திருவாசகத்தில் உள்ள 658 பாடல்களில் இந்த 28 பாடல்களும் இணையாது நிற்கின்றன. ஆகையால்தான் இணையாத பாடல்கள் என்ற தலைப்பு தரப்பெற்றுள்ளது. 1. நீத்தல் விண்ணப்பம் 1. நீத்தல் விண்ணப்பம் (6) இன்றுள்ள பதிப்புகளில் திருச்சதகத்தை அடுத்து 'நீத்தல் விண்ணப்பம் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள 50 பாடல்களும் இறைவன் தம்மை ஒதுக்கிவிட்டு மறைந்து விடக்கூடாது என்ற கருத்தில் அடிகளாரால் பாடப்பெற்றவையாகும். இப்பகுதியை முதலில் வைத்து எண்ணுவதற்குச் சில காரணங்கள் உண்டு. அடிகளார் வரலாற்றை அறிந்து கொள்வதில் எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் ஒன்றுமட்டும் நிச்சயம் அமைச்சர் ஒருவர் குதிரைமீது இவர்ந்து திருப்பெருந்துறைவழி வருகிறார். இறையடியார்கள் புடைசூழக் குருந்தமரத்தடியில் ஒரு