பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை 357 குருநாதர் அமர்ந்துள்ளார். அவருடைய தெய்வீக அலைகள் அமைச்சரை ஈர்த்து அவருடைய திருவடிகளில் விழுமாறு செய்கிறது. ஒரே விநாடியில், திருவடி தீட்சை பெற்றவுடன், அமைச்சர் மறைகிறார்; மணிவாசகர் தோன்றுகிறார். அந்த விநாடியில் தமக்குக் கிடைத்த இறையனுபவம் எத்தகையது என்பதையும் தம் உடலுக்குள் ஏற்பட்ட மாற்றம் எத்தகையது என்பதையும் அடிகளாரே விரிவாகப் பாடியுள்ளார். இந்தப் புதிய பிறப்பில், புதிய அனுபவங்களும் புதிய உணர்ச்சிகளும் புதிய ஆற்றலும் அந்தப் பழைய உடம்பிலேயே ஒரே விநாடியில் ஏற்றப்பெற்றுவிட்டன. கண்களை இறுக மூடிக்கொண்டு, இந்த இறையனுபவத்தில் மூழ்கித் திளைக்கின்ற அடிகளார், கண்களைத் திறந்தவுடன் ஒரு பேரதிர்ச்சிக்கு உள்ளாகிறார். எதிரே இருந்த குருநாதர், அவரைச் சுற்றியிருந்த அடியார்கள் யாவரும் மாயமாக மறைந்துவிட்டனர். இது கணவன்று, நனவு என்று அடிகளாரால் உணரமுடிகின்றது. அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றப்பெற்ற இந்த மாற்றம் இன்னும் அப்படியே இருக்கின்றது. இறையனுபவத்தில் திளைத்த மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கனுள், மனம் மட்டும் அனுபவத்தை விட்டு வெளியே வந்துவிட்டது. குருநாதர் திருவுருவத்தையும் அடியார் கூட்டத்தையும் தம் ஊனக்கண்களால் கண்டதை எப்படிக் கனவு என்று கூறமுடியும்? குருநாதர் திருவடிகள் தம் தலைமேல் வைக்கப்பட்டிருந்ததையும் அத்திருவடிகளைத் தம் இரண்டு கைகளாலும் இறுகப் பற்றிக்கொண்டிருந்ததையும் எப்படிக் கனவு என்று கூறமுடியும்? அது கனவு அன்று, நனவுதான் என்பதை அறிந்திருந்த மனம், இப்போது அவை காணப்படாமையால் பெரும் கலக்கத்தை அடைகிறது. இந்த நிலையில் அடிகளார் மனத்தில் சில வினாக்களும் விடைகளும் தோன்றி மறைந்திருக்க வேண்டும். தாம் செல்லும் வழியில், திருப்பெருந்துறையில்,