பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 திருவாசகம் சில சிந்தனைகள்-5 குருந்த மரத்தடியில் ஒரு குருநாதர் இருப்பார், அவரெதிரே சிவனடியார்கள் அமர்ந்திருப்பார்கள் என்பதைத் திருவாதவூரர் நினைந்துகூடப் பார்த்ததில்லை. திடீரென்று தோன்றிய காட்சியையும், தம்மைக் குருநாதர் ஆட்கொண்ட சூழ்நிலையையும் நினைந்துபார்த்தபொழுது, இந்நிகழ்ச்சி தம் விருப்பத்தாலோ வேண்டுகோளாலோ கிடைத்ததன்று என்பதை அடிகளார். நன்கு உணர்ந்தார். குதிரைமேல் அமர்ந்து அமைச்சர் கோலத்தில் வந்த தம்மைச் சற்றும் எதிர்பாராத நிலையில் இழுத்துப் பிடித்து ஆட்கொண்டவர் குருநாதர் என்றால், இது எப்படி நடந்தது? நடைபெற்றவற்றிற்குத் தாம் ஒரு சிறிதும் பொறுப்பல்லர், குருநாதர் அருளாலேயே இவை நடைபெற்றன என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிகிறது. இப்படி ஈர்த்து ஆட்கொண்ட குருநாதர் மறைந்து விட்டார் ஆதலால் ஐயா, நீ எங்கே போய்விட்டாய்? என்னை விட்டுவிட்டுப் போய்விடாதே’ என்று கூறிக் கதறுகிறார். ஆக, திருப்பெருந்துறை நிகழ்ச்சி நடந்து முடிந்தவுடன் முதன்முதலாக அடிகளார் வாய்விட்டு அரற்றியது நீத்தல் விண்ணப்பமாக வெளிவந்தது. முதற்பாடலிலேயே தாம் கடையவன் என்றும் குருநாதர்தான் கருணை காரணமாகத் தம்மை ஆட்கொண்டார் என்றும் முதலிரண்டு அடிகளில் கூறிய அடிகளார் நான்காவது அடியில் தம்முடைய நிலையை ஒரே சொல்லில் மிக அற்புதமாக வெளிப்படுத்து கிறார். தளர்ந்தேன்’ என்பதே அச்சொல்லாகும். தளர்ந்தேன்’ என்ற இச்சொல்லின் விரிவுதான் நீத்தல் விண்ணப்பத்தின் முதல் நாற்பத்தேழு பாடல்களில் (105.15) பேசப்பெறுகின்றது. அடுத்த இரண்டு பாடல்களில் (152, 153) இவருடைய மனநிலையில் ஒரு மாற்றத்தைக் காண முடிகிறது. தாம் தளர்ந்ததாகவும், தம்மை அவன் தாங்கிக் கொள்ளவேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடுவதாகவும் பாடிக்கொண்டு வந்த அடிகளார், 152, 153 ஆம் பாடல்களில்