பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_359 இந்த வழியையே மாற்றிவிடுகின்றார். 47 பாடல்கள் பாடுகின்றவரையில் அவன் எதிர்ப்படவும் இல்லை, தம்மைத் தாங்கிக் கொள்ளவும் இல்லை. எனவே கெஞ்சும் பாணியை விட்டுவிட்டு, புதிய முறையில் அவனை அச்சுறுத்துகிறார். நீ என்னை ஆட்கொள்ளாவிட்டால் உலகவர்முன் உன் மானத்தை வாங்கிவிடுவேன்’ என்ற முறையில் பாடுகிறார். இவை இரண்டு பாடல்களும் நம்பிக்கை முற்றும் இழந்த நிலையில் தோன்றும் ஒரு புதுத் தைரியத்தில் (desperate courage) எழுந்த பாடல்களாகும். இந்த இரண்டு பாடல்களில் காணப்பெறும் தைரியம் 50வது பாடல் தொடங்குகையில் வடிந்துவிடுகின்றது. தம்மைத் தாமே நொந்துகொண்டு பழைய முறையில் கெஞ்சும் பாடலாக இறுதிப் பாடல் (154) வெளிப்படுகிறது. இதுவரை கூறியவற்றால் திருப்பெருந்துறை நிகழ்ச்சியை அடுத்து, ஏற்பட்ட அதிர்ச்சியால் பாடப் பெற்றவை நீத்தல் விண்ணப்பப் பாடல்கள் என்று அறியமுடிகின்றது. ஆகவே, திருவாசகம் நீத்தல் விண்ணப்பத்துடன்தான் தொடங்க வேண்டும் என்பதே இந்த ஆசிரியனின் சிந்தனையாகும். III. இறைவன் பெருமை பேசுதல் இதனுள் தொகுக்கப்பெறும் பதிகங்கள்: 1. கீர்த்தித் திருஅகவல்(2) 2. திருஅண்டப்பகுதி (3) 3. திருஏசறவு (38) 4. போற்றித் திருஅகவல் (4) திருவாசகம் முழுவதுமே இறைவன் பெருமை பேசுகின்ற பாடல்கள்தாமே? அப்படியிருக்க இப்படி ஒரு தலைப்பைத் தந்து அதனுள் மேலே கூறிய நான்கைமட்டும்