பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருவாசகம் சில சிந்தனைகள்-5 தலைதடுமாற்றமும் பொய்யும் போனவுடன் எவ்வித அப்பழுக்குமின்றித் துய்மை அடைந்துவிடுகிறார் அடிகளார். அப்பொழுது எங்கும் நிறைந்துள்ள அந்தத் திருவடி இவருக்கென்று தனியே காட்சி தருகிறது. இவர்மாட்டுக் கொண்ட கருணை காரணமாக, திருவடி தரிசனம் தந்ததுடன் அமையாமல், நாம ரூபம் கடந்த அந்தப் பொருள் ஒரு வடிவு தாங்கி, சத்தியசொரூபனாகி, மெய்யனாய் அவர் முன்னர் காட்சியளித்தது. அந்த வடிவின் திருவடி, இவரைச் சுழலிலிருந்து காப்பாற்றிக் கரைசேர்த்தது. மேலும் தையலார் சுழலில் இவர் வீழ்வதற்குக் காரணமாயிருந்த பொய்யையும், தன் திருவருளைத் தந்து போக்கிற்று. - வடிவிலாததும், வடிவு கடந்ததுமாகிய அப்பொருள் பரவெளி தரிசனம் தந்து வெளிகாட்டி அவர்முன் நின்றது மற்றோர் அற்புதம். இவை ஒவ்வொன்றும் தனித்தனி அற்புதமாக இருப்பினும் அனைத்தையும் ஒன்றுசேர்த்து முன்னின்றது ஒர் அற்புதம்’ என்று பேசுகிறார். 570, ஏய்ந்த மா மலர் இட்டு முட்டாதது ஒர் இயல்பொடும் வணங்காதே சாந்தம் ஆர் முலைத் தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகிப் போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல் இணை காட்டி வேந்தன் ஆய் வெளியே என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே 2 இந்தப் பாடலில் உடம்பின் LILIT 676767 என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் அடிகளார். எந்த ஒரு