பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_35 பேசும் தன்மையை விட்டுவிட்டு, புதிய காட்சியின்மூலம் அவனைக் காண்கிறார். அண்டம் அவருடைய காட்சிக்கு உட்படுகிறது. அந்த அண்டம் விரிந்து கொண்டே செல்வதும் அவருடைய காட்சிக்குத் தென்படுகிறது. வெகுவேகமாக விரிந்து பெரிதாகிக் கொண்டே செல்லும் இந்த அண்டத்தின் காட்சி கிடைத்தவுடன் அதனைவிடப் பன்படங்கு பெரியவனாகக் காட்சியளிக்கும் இறைவன் காட்சி கிட்டுகிறது. அவனோடு அண்டத்தை ஒப்பிட்டால் இந்த மாபெரும் அண்டம் இல்துழை கதிரின் துன் அணுவாகச் சிறுத்துவிடுகிறது. அவன் பெருமையைப் பேசத் தொடங்குகையில் அவன் எளிமையாகக் கீர்த்தித் திரு அகவலிலும் அவன் பெருமையை அண்டப்பகுதியிலும் கூறினாராயிற்று. அவன் எவ்வளவு பெரியவனாய் இருந்தால் என்ன? சிற்றுயிர்களாகிய நமக்கு அவனால் ஏதேனும் பயன் உண்டா என்ற வினாவை எழுப்புபவருக்கு விடை கூறுவது போலத் திரு ஏசறவுப் பாடல்கள் அமைந்துள்ளன. தம்முடைய பழைய வாழ்க்கையையும் இப்போது கிடைத்துள்ள புதிய வாழ்க்கையையும் அடிகளாரால் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. அமைச்சராக இருந்தபொழுது கடமையுணர்ச்சியால் உந்தப்பெற்ற அவருடைய மனத்தில், இரும்பு போன்ற திண்மை இருந்ததே தவிர, மென்மைக்கும் அன்புக்கும் அங்கு அதிக இடம் இல்லை. எனவே பழமையை நினைத்தவுடன் முதலில் அவருக்கு நினைவில் வருவது இரும்புபோன்ற மனம். அந்த முறையிலேயே இரும்புதரு மனத்தேனை (546) என்று தொடங்கும் பாடலுடன் திருஏசறவுப் பதிகம் தொடங்குகிறது. இப்பாடலில் அடுத்துவரும் தொடர் ‘என்பு உருக்கி’ என்பதாகும். திருவாதவூரருக்குக் குருநாதர் திருவடியில் வீழ்கின்ற வரையில் இருந்தது இரும்புமணம். அந்த இரும்புமனத்தைக் குருநாதர் என்ற காந்தம்