பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_363 6. திருப்புலம்பல் (39) 7. சென்னிப் பத்து (42) 8. பிடித்த பத்து 37) நீத்தல் விண்ணப்பத்தில் அஞ்சி நடுங்கி நொந்த மனத்துடன் என்னை விட்டுவிடாதே, ஐயா என்று தொடங்கினார், அவனுடைய எளிவந்த தன்மை முதலியவற்றை அறிந்து, கீர்த்தித் திருஅகவல், அண்டப்பகுதி என்பவற்றைப் பாடினார். அடுத்துத் திருஏசறவையும் பாடிமுடித்தபின் தாம் செய்யவேண்டியது என்ன என்பதை நன்கு உணர்ந்துகொண்டராதலின், போற்றி போற்றி என்று வணங்குவதைவிட வேறு செய்யத்தக்கது ஒன்றுமில்லை என்ற முடிவுடன் திருச்சதகத்தைத் தொடங்குகிறார். தொடக்கத்தில் இரண்டு செயல்கள் நடைபெறுகின்றன. கைகள் தலைமேல் எறி நெகிழாமல் கோத்து நிற்கின்றன. இத்தொகுப்பினுள் முதலாவதாக நிற்பது திருச்சதகம். திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப்பின்னர் நரி பரியாகிய நிகழ்ச்சி நடைபெற்றிருக்க வேண்டும். மூன்று அகவல்களில் மணிவாசகரின் வளர்ச்சியைக் காணமுடிந்தது அல்லவா? இப்பொழுது அந்த வளர்ச்சிக்கு எவ்விதத் தளர்ச்சியும் ஏற்படாமல் ஓர் உறுதிப்பாடு அவர் மனத்திடைத் தோன்றிவிட்டது. திருச்சதகத்தின் முதற்பாடலில் (5) சித்தத்தின் உள்ளே தோன்றிய உறுதிப்பாட்டையும் அதன்பின் உடம்பில் தோன்றிய மாறுபாட்டையும் வரிசைப்படுத்திப் பேசுகிறார். இறையன்பில் தோய்ந்த ஒருவருடைய உடல் என்ன என்ன மாற்றங்களை அடையும் என்பதை வரிசைப்படுத்தி இப்பாடலில் கூறுகிறார். உறுதிப்பாடு உடலில் எங்கே வெளிப் படுகிறது என்ற வினாவிற்கு விடைகூறுவார்போல் கைதான் நெகிழவிடேன்' என்ற தொடரைப் பயன் படுத்துகிறார்.