பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364- திருவாசகம் சில சிந்தனைகள்-5 கூப்பிய கைகளை நெகிழ விடமாட்டேன் என்ற சொற்கள் உள்ளத்தில் தோன்றிய உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும். 'கையை நெகிழ விடமாட்டேன்’ என்ற உறுதிப் பாட்டை வெளிப்படுத்திவிட்டு ‘என்னைக் கண்டுகொள்ளே' என்ற விண்ணப்பத்தையும் வைக்கின்றார். இந்த உறுதிப்பாடும் விண்ணப்பமும் என்ன பயன் தந்தன என்பதையும் திருச்சதகத்தின் 99 ஆம் பாடலில் மாலும் நான்முகத்தொருவன் யாரினும் முன்ன எம்பிரான் வருக என்னெனை’ (103) என்ற தொடரில் வெளிப்படுத்துகிறார். உறுதிப்பாடு என்னும் தலைப்பில் இரண்டாவதாக அமைவது திருப்பாண்டிப் பதிகம் ஆகும். திருப்பெருந் துறையில் மானுட வடிவில் இருந்த குருநாதரையும் அவர் திருவடிகளையும் கண்டு வணங்கினாரல்லவா? பின்னர் நூற்றுக்கணக்கான குதிரைகளோடு குதிரைச்சேவகன் ஒருவன் வருகின்றான். அவன் யார் என்பது மக்களுக்கோ மன்னனுக்கோ தெரியவில்லை. ஆனால், அடிகளாருக்குக் குதிரைச் சேவகன் யார் என்று புரிந்துவிட்டது. குருநாதர் திருவடிகள் நிலத்தில் தோய்ந்திருந்தன. ஆனால், குதிரைச் சேவகன் திருவடிகள் குதிரையின் அங்கவடியில் நுழைக்கப்பட்டிருந்தன. அதனைக் கண்டவுடனேயே இது பழைய திருவடிதான் என்று அடிகளாரின் உள்ளம் உணர்த்திற்று. ஆகவே, இப்பரிமேல் வந்த சேவகனார் ‘ஒருவரையன்றி உருவறியாது என்றன் உள்ளமதே என்று பாடுகிறார். எத்தகைய உறுதிப்பாடு உள்ளத்தே இருந்தால் இவ்வாறு பாடமுடியும்! அடுத்தபடியாக உறுதிப்பாடு வெளிப்படுவது குலாப் பத்திலாம். இப்பொழுது அடிகளார் புறவுலகிலுள்ள எந்தப் பொருளையும் பற்றிய இயல்பு, தன்மை என்பவற்றை அறியும் அறிவை இழந்துவிட்டார். கையிலிருப்பது ஒடு, கவந்தி என்னும் இரண்டே இரண்டு பொருள்கள்தான். குலாத்தில்லை ஆண்டவனின் அருளால் பெற்ற பயன்