பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_365 என்ன? ஒடு, கவந்தி என்ற இரண்டுமட்டுமே எஞ்சிய பொருள்கள் என்பதை அறிய முடிந்தது; உள்ளம் கசிய முடிந்தது தேடும் பொருள் ஒன்று இருக்குமேயானால் அது சிவன்கழலே என்ற உறுதி பிறந்தது என்ற முறையில் இப்பதிகம் செல்வதால் இதனை மூன்றாவதாக வைத்தோம். இனி, அடுத்து வைத்திருப்பது திருவார்த்தை என்ற பதிகமாகும். எல்லையற்ற உறுதிப்பாடும் உருகும் உள்ளமும் கொண்ட அடிகளாருக்கு, முன்னர் இருந்த பசுகரணங்கள் நீங்கி இப்போது பதிகரணங்களாக மாறிவிட்டன. கருவிகளில் ஒன்றாகிய கண்ணின்மூலம் புறத்தே உள்ள பிறரைக் காண்கிறார் அடிகளார். திருவாதவூரராக இருந்தபொழுது பதவி, செல்வம், அதிகாரம் என்பவற்றால் சூழப்பெற்றிருந்த மக்களை உயர்ந்தவர்கள் என்றும் அவை இல்லாதவர்களைச் சாதாரண மக்கள் என்றும் கருதியிருந்தார். இந்த வேறுபாட்டைத் தவிர வேறு எத்தகைய வேறுபாடும் அவர் மனத்திலோ உள்ளத்திலோ தோன்றியதில்லை. அந்த நிலையில் பிரான் என்று அவரால் ஏற்றுக்கொள்ளப்பெற்றவன், இறைவன் ஒருவனைத்தவிர, அரசன் ஒருவனே ஆவான். காரணம் அவரால் மதிக்கப்படவேண்டியவர்கள் வேறு யாருமில்லை. இப்போது நிலைமை மாறிவிட்டது. பசுகரணப் பார்வையில் பிரான் என்று ஏற்றுக்கொள்ளப்பெற்றவன் இப்பொழுது பொருளாகவே மதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, } }éa பிரான்கள் காட்சியளிக்கின்றனர். இவரைப்போலவே ஓடும் கவந்தியுமே உறவு என்று இருப்பவர்கள் அவர்கள். இது அவர்களுடைய புறத்தோற்றம். மாதிவர் பாகன், மறை பயின்ற நாயகன் எங்கோ கயிலையில் இருக்கிறான் என்று பலரும் கருதுகிறார்கள். திருப்பெருந்துறையில் மண்ணிடை வந்திருந்து மானுட வடிவத்தில் குருந்த மரத்தடியில் இருந்தவன் வேறு யாருமல்லன் - அவனே ஆதிபிரம்மம்; அவனே மாதிவர் பாகன்; அவனே மறைபயின்ற நாயகன்