பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை 369 அத்திருவடியைக் கைகளால் பிடித்துக்கொள்ள முயல்கிறார். திருவடி எங்கோ இருந்தால் அதனைப் பற்றிக் கொள்வது கடினம். ஆனால், சென்னிக்கண் நிலைபேறாகத் தங்கி எப்போதும் மலர்ந்து நிற்கும் அத்திருவடிகளைக் கைகளால் பற்றிக்கொள்வது எளிதாகிவிட்டது. கீழே தொங்கும் கைகளை மேலே தூக்கி, அத்திருவடிகளைப் பற்றவேண்டும் என்ற முயற்சிகூட அடிகளாருக்குத் தேவைப்படவில்லை காரணம் கைகள் முன்னரே தலைமேல் கோக்கப்பட்டிருந்தன. திருச்சதகத்தின் முதற்பாடலில் கைதான் நெகிழ விடேன்’ என்றல்லவா பாடியுள்ளார்? தலைமேல் கோக்கப்பட்ட கைகள் என்றும் விடுபடப்போவதில்லை என்பதைத்தானே ‘நெகிழவிடேன்’ என்று கூறினார்? அப்படியானால் இந்தக் கைகள் எங்கே கோக்கப்பட்டிருந்தன? இதற்கு விடையும் அந்தப் பாடலிலேயே 'கைதான் தலைவைத்து’ என்ற தொடரால் குறிப்பிட்டுவிட்டார். r இந்தப் புறச்செயலுக்கு ஈடாக அகத்திலும் ஒரு செயல் நடைபெறுகின்றது. உள்ளம் பொய்தான் தவிர்ந்து போற்றி செயசெய’ என்று வாய் வாழ்த்துகிறது. அதாவது மனம், மொழி, மெய் என்ற மூன்றும் ஒரே திசையில் செல்கின்றன என்பதைச் சதகத்தின் இந்த முதற்பாடல் விளக்கிவிட்டதாகலின் இதனை உறுதிப்பாட்டின் தொடக்கம் என்று கூறினோம். மனம், மொழி, மெய் என்ற மூன்றும் ஒரே செயலில் ஈடுபடுகின்றன என்றாலும் இவையனைத்தும் அடிகளாரின் உள்ளத்தையும் உடலையும் பொறுத்தனவேதவிர, வேறு ஒருவருக்கும் இங்கு இடமில்லை. கையை நெகிழ விடமாட்டேன் என்று தம் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய அடிகளார், தொடர்ந்து அதே பாடலில் 'உடையாய் எனைக் கண்டுகொள்ளே’ என்ற வேண்டுகோளையும் இறுதியில் வைக்கின்றார்.