பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதப் பத்து 29 பொருளுக்கும் குறைந்தபட்சம் இருவகைப் பயன்கள் உண்டு. ஒரு கத்தியை எடுத்துக்கொண்டால் அதனால் பழங்களை வெட்டித் துண்டாக்கி எளிதாக உண்ண முடியும். பழங்களை வெட்டுவதற்குப் பதிலாகப் பிற உயிர்களைப் போக்கவும் அந்த கத்தியைப் பயன்படுத்தலாம். அதேபோலத் தம்முடைய உடம்பு எதனைச் செய்யவில்லை, எதனைச் செய்தது என்பதை முதலிரண்டு அடிகளில் விளக்குகிறார். அரிதிற் கிடைத்த இந்த உடம்பைக்கொண்டு, நாண்மலரைத் தேடிப் பிடித்துப் பறித்து, இறைவன் திருவடிகளில் இட்டு வழிபடவும் செய்யலாம். இதன் மறுதலையாக மகளிரைத் தேடிப் பிடித்து முயங்கியும். காலத்தைக் கழிக்கலாம். இவ்விரண்டையும் எடுத்துக்கூறிய அடிகளார், முதலிற் கூறிய வழியில் தம் உடம்பைப் பயன்படுத்தவில்லை; இரண்டாவது கூறிய வழியிலேயே முழுமூச்சாகச் செல்லத் தொடங்கியதாகக் கூறுகிறார். அப்படியே அவர் சென்றிருப்பின், மாபெரும் துயர் அவரை ஆட்கொண்டிருக்கும். எனவே, துயரக்கடலில் அவர் புகாவண்ணம் அருள்செய்தார் குருநாதர் எப்படிச் செய்தார்? முதலில் தம் திருவடி இணையை அடிகளார் தரிசிக்கும் வண்ணம் நேரே காட்டினார். அந்தத் திருவடி தரிசனம் கிடைத்தவுடன் துயர்க்கடலில் புகாமல் நிலைகொள்ள முடிந்தது. அதுமட்டுமா? துயர்க்கடலில் புகுவதற்குக் காரணமாக இருந்த தையலார் மையலும் அவரை விட்டு நீங்கிற்று. இந்த அற்புதங்களைச் செய்த குருநாதர், ஞானத்தின் எல்லை தாமே வேந்தன்) என்பதை அடிகளார் உணரும்படியாக வெளிப்பட்டு நின்றார் என்க. இவ்விரண்டு பாடல்களிலும், நான்முகன், நாரணன், தேவர்கள் ஆகிய அனைவரும் 'கனவேயும் காண்பரியவனாகிய (244 அப்பரம்பொருள், தம்மாட்டுக்