பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை 371 உள்ளம்; செயசெய போற்றி என்னும் வாய், சென்னிமேல் அமைந்துள்ள நெகிழாத கைகூப்பு - வியர்த்து நடுங்கும் உடல்; அருவிபோல் நீர்பெருகும் கண்கள்; இறைவனின் விரையார் கழலைப் பதித்த நெஞ்சு, இந்த முறையில் ஒரு பக்தர் நிற்கிறார் என்றால், பக்தி வலையிற் படுபவனாகிய இறைவன் இவரைவிட்டு எங்கே போகமுடியும்? அடிகளாரின் வலைப்பின்னலில் வசமாக் மாட்டிக்கொண்டான் அவன். ஆதலால்தான், உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே’ என்று பிடித்த பத்தின் பத்துப் பாடல்களிலும் அருளிச் செய்கின்றார். அடிகளாரின் உறுதிப்பாட்டின் வளர்ச்சியைத் திருச்சதகம், திருப்பாண்டிப் பதிகம், குலாப் பத்து, திருவார்த்தை, உயிருண்ணிப் பத்து, திருப்புலம்பல், சென்னிப் பத்து, பிடித்த பத்து என்ற வரிசை முறையில் வைத்துக் காணலாம். V. கூடிப்பாடி ஆடுதல் இத்தொகுப்பினுள் கீழ்க்காணும் பத்துப் பதிகங்கள் இடம் பெற்றுள்ளன: 1. திருஅம்மானை (8) 2. திருத்தெள்ளேணம் (1) 3. திருத்தோணோக்கம் (15) 4. திருப்பொற்சுண்ணம் (9) 5. திருப்பூவல்லி (13) 6. திருப்பொன்னுரசல் (). 7. 955379ನು (2)