பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372-திருவாசகம்-சில சிந்தனைகள்-5 8. திருவுந்தியார் (14) 9. திருவெம்பாவை (7) 10. திருப்பள்ளியெழுச்சி (20) திருபள்ளியெழுச்சி தவிர மற்ற அனைத்தும் மகளிர் விளையாட்டேயாகும். ஆறு அல்லது ஏழு வயதுச் சிறுமியில் தொடங்கி 17, 18 வயதுக் குமரிவரை உள்ள பெண்கள் விளையாடும் விளையாட்டுக்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. அம்மானை விளையாட்டைச் சற்று முதிர்ந்த வயதுடைய பெண்களும் ஆடுவார்களேயாயினும் மிக இளம் சிறுமி களுக்குமட்டும் உரிய விளையாட்டு என்றே இதனைக் கூறவேண்டும். இச்சிறுமிகளுக்கு அடுத்த பருவத்தில் உள்ள சிறுமிகள் பறை போன்ற ஒரு வாத்தியத்தைக் கையில் வைத்துத் தட்டிக்கொண்டு விளையாடும் விளையாட்டே திருத்தெள்ளேனம் ஆகும். அடுத்துள்ள தோணோக்கம் மூன்றாவது நிலையிலுள்ள ஓரளவு வளர்ச்சி பெற்ற சிறுமிகள் விளையாடும் விளையாட்டாகும். இனி அடுத்துள்ள பொற்சுண்ணம், பூவல்லி, பொன்னுாசல் என்பவை உலக்கை பிடித்து இடிக்கும் உடல் வன்மையும், ஊஞ்சலில் ஏறிக் காலைத் தரையில் ஊன்றி விளையாடும் ஆற்றலும் பெற்ற மகளிர் விளையாடும் விளையாட்டாகும். மரத்தில் பற்றிப் படர்ந்துள்ள கொடிப் பூக்களை எம்பிப் பறிக்கும் உடற்கூறு உடையவர்களே பூவல்லி விளையாட்டிற்குத் தகுதியானவர்கள் ஆறு வயதில் தொடங்கி 14 அல்லது 15 வயதுவரை உள்ள சிறுமிகள் விளையாடும் விளையாட்டுக்களே இந்த ஆறிலும் இடம்பெற்றுள்ளன. இவர்களைவிட வளர்ச்சியடைந்தவர்கள் விளையாடும் விளையாட்டுக்கள் சாழல், உந்தியார் என்பவையாகும். இவையிரண்டும் வெறும் உடல் விளையாட்டோடு