பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_பதிக வைப்புமுறை-0-373 நில்லாமல் உரையாடலிலும் தேர்ச்சி பெற்றவர்கள்மட்டுமே விளையாடும் விளையாட்டுக்கள் ஆகும். அடுத்துள்ள திருவெம்பாவை திருமணப் பருவத்திலுள்ளவர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும். இவை ஒருபுறமிருக்க, 658 பாடல்கள் உள்ள திருவாசகத்தில் சிறுமிகள், மகளிர் என்பவர்களுடைய விளையாட்டுக்களுக்காக 芷3 பாடல்கள் பாடப் பெற்றுள்ளன என்றால், இதைப்பற்றிச் சற்றுச் சிந்திக்க வேண்டும். இந்த எண்ணிக்கைகூடச் சரியானது என்று சொல்வதற்கில்லை. திருத்தோள் நோக்கத்தில் 20 பாடல்களுக்குப் பதிலாகப் பதினான்கே கிடைத்துள்ளன. திருப்பொன்னுரசலில் பத்தாவது இருந்திருக்க வேண்டும். அதிலும் ஒன்று குறைந்திருக்கிறது. எது எவ்வாறாயினும் திருவாசகத்தில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதி சிறுமி களுக்கும் மகளிர்க்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்பாற் பிள்ளைத் தமிழ் தவிர வேறு எந்த நூலிலும் மகளிர்க்காக நூலில் நான்கில் ஒருபகுதி ஒதுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. திருவாசகத்தின் தனித்துவத்திற்கு இதுவும் ஒரு சான்றாகும். இந்த நிலையில் மகளிர் விளையாட்டு அடிப்படையில் இத்தனை பாடல்களை அடிகளார் பாடியுள்ளார் என்றால் - இதுபோன்ற அமைப்புமுறை அந்நாளில் தோன்றிய நூல்களில் இல்லை என்றால், அடிகளார் ஏன் இவற்றைப் பாடினார் என்ற வினாவை எழுப்பிக்கொண்டு விடைகாண முற்படுவதில் தவறில்லை. தமிழும் சைவமும் இணைந்து வளர்ந்த மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டி நாட்டில் ஆலவாய்ச் சொக்கனே தனக்குரிய பழம்பதியாகக் கொண்ட பாண்டிநாட்டில் சைவ சமயம் 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தளர்ந்து மெலிந்துபோயிருந்தது. சங்கரருடைய அத்வைதம், மகளிர்க்குச் சமத்துவம் தராத சமணம் ஆகியவை பெருவழக்கில் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே தலைதூக்கி நின்றன.