பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374_திருவாசகம் சில சிந்தனைகள் 5 இந்தக் கால கட்டத்தில் பெரும் கல்வியாளராகவும் பாண்டி நாட்டின் அமைச்சராகவும் இருந்த திருவாதவூரர் நாட்டைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும். சோழர்கள் பெரிய அளவில் இன்னும் தலைதுாக்கவில்லை என்றாலும், சோழ நாட்டிலிருந்த சைவ ஆதிக்கம் பாண்டி நாட்டில் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். இது ஒருபுறமிருக்க, அடிகளாருக்கு ஒரு நூற்றாண்டு முன்னர் வாழ்ந்த பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் என்ற வைணவப் பெரியார்கள் பாண்டிநாட்டிலே தோன்றி வளர்ந்து வைணவ சமயத்திற்கு ஆக்கம் சேர்த்தனர். அன்றைய பாண்டி நாட்டின் சமயநிலை இதுதான். இந்தச் சூழ்நிலையில் அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி’ (4:75-76) ஆண்டுகொண்டதால் அமைச்சராகிய திருவாதவூரர், மணிவாசகராக மாறினார். இறையனுபவத்தில் முங்கித் திளைத்த அடிகளார் மனத்தில் உறுதிப்பாடு தோன்றி வெகுவேகமாக வளரத் தொடங்கியது. அருள் பெற்ற நிலையில், பாண்டி மக்களையும் யாத்திரை செய்யும்போது சோழ நாட்டு மக்களையும் கண்ட அடிகளார், ஒரு வகையில் திகைப்படைகிறார். சொக்கன் மண் சுமந்த மதுரையும், மூவர் முதலிகள் ஏராளமான பண்கள் பாடிய சோழநாடும் சமய வாழ்க்கையில் கவனம் செலுத்தாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று சுற்றித் திரிந்தது. வலுவான பாண்டி மன்னனோ இல்லை. சோழ நாட்டில் பல்லவர் காலம் முடிந்து சோழர்கள் இன்னும் வலுவாகக் கால் ஊன்றவில்லை. இந்த நிலையில் சைவசமயத்தைக் கட்டிக் காக்க வலுவான ஆட்சி இரண்டு இடத்திலும் இல்லை. மக்களிடையே சைவசமயத்தைப் பரப்புவதற்கு இரண்டு வழிகள் உண்டு. மூவர் முதலிகள்போல்