பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 திருவாசகம் சில சிந்தனைகள்-5 ஆண்டியானார் என்றால், பெரும்பாலான மக்கள் இதன் உட்கருத்தைப் புரிந்துகொள்ளாமல் அடிகளார் காது கேட்கும்படியாகவே அவரைப் பைத்தியம் என்று எள்ளி நகையாடினர். இந்த மனநிலையிலுள்ள மக்களைத் திருத்திப் பணிகொள்ளுதல் முடியாத காரியம். அன்றியும் அவருக்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் புறத்தாருக்குத் தெரியும்படியாக நிகழவில்லை. நாவரசர் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மக்கள் கண்கூடாகக் கண்டனர். ஆனால் அடிகளார் வாழ்க்கையில் நடந்த மாற்றத்தை அவரைத் தவிர வேறு யாரும் காணவில்லை. இத்தகைய காரணங்களால் மக்களை ஈர்த்து, தம் வயப்படுத்தி, சமயநெறியில் செலுத்தும் வழியை அடிகளார் மேற்கொள்ளாததில் வியப்பொன்றுமில்லை. அப்படியானால், இந்த மக்களைத் திசைதிருப்ப வேறு எந்த வழியைக் கையாளுவது? வேறு எந்த நூலிலும் காணப்பெறாத முறையில் தாம் பெற்ற இறையனுபவத்தை, இறைப்பிரேமையை அடிகளார் பாடியுள்ளது உண்மைதான். இதனைப் படிக்கின்ற மக்கள்கூட ஈடுபாட்டைப் பெறவில்லை. காரணம், இப்பாடல்களைப் பாடியவர் பைத்தியம் என்று மக்கள் கருதியிருந்ததால், இப்பாடல்களின் அருமைப்பாட்டை அப்பொழுது அவர்கள் அறியவில்லை. இப்படியுள்ள மக்கள் கூட்டத்தை மாற்றுவழியில் திருப்ப வேண்டும் என்றால், புதியதொரு உத்தியைக் கையாள வேண்டும். அமைச்சராக இருந்து நாடு முழுவதும் சுற்றித் திரிந்த அடிகளார், ஒரு மனவியல் உண்மையை நன்கு அறிந்துகொண்டார். வயது வந்தவர்களைத் திருத்துவதைக் காட்டிலும், மிக இளஞ்சிறுமிகளைப் பயன்படுத்தினால் இது எளிதில் நடைபெறலாம். ஒரு சிறுமியைத் திருத்துவதன்மூலம் ஒரு குடும்பத்தையும் சுற்றியுள்ளவர்களையும் திருத்தமுடியும் என்ற உண்மையை