பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_377 அறிந்துகொண்ட அவர், தம்முடைய அருட்பாடல்களில் நான்கில் ஒரு பங்கைச் சிறுமிகளுக்கும் வயதுவந்த மகளிர்க்கும் ஒதுக்கிவிட்டார். மிகப் பெரிய தத்துவங்களையும் இறைவன் பெருமையையும் நேரடியாகச் சொன்னால் சிறுமிகள் அதனை விளங்கிக்கொள்வது கடினம். இதனை அறிந்த அடிகளார். இதிலும் ஒரு புதிய உக்தியைக் கையாண்டார். சிறுமிகளைக் கூர்ந்து கவனித்த அவர் 6 அல்லது 7 வகை விளையாட்டுக்களில் சிறுமிகள் பெரிதும் ஈடுபாடு கொள்வதை நன்கறிந்தார். அந்த விளையாட்டுக்குரிய பாடல்களையும் அவற்றின் ஒசைப்போக்கையும் நன்கு அறிந்துகொண்ட பெருமான் அந்த விளையாட்டுக்களின் பெயர்களோடு சேர்த்து அந்த விளையாட்டுப் பாடல்களின் இசைப்போக்கிலேயே தாமும் t JFTL- முனைந்தார். பாடுதுங்காண் அம்மானாய், தோள்நோக்கம் ஆடாமோ, தெள்ளேனம் கொட்டாமோ என்ற முறையில் பாடல்களை வைத்தார். வளர்ச்சியடைந்த பெண்கள் விளையாட்டில் சாழல், உந்தி என்ற பாடல்களை அமைக்கும்பொழுது இறைவன் பற்றிய _fG) தத்துவங்களையும் நுணுக்கங்களையும் அப்பாடல்களில் பெய்து பாடினார். இத்தனை பாடல்களும் ஏனைய பாடல்களில் காணப்பெறாத புதிய இசை அமைப்புகளைக் கொண்டிருந்தனவே தவிர, தாளம் போட்டுப் பாடும் வகையில் அமையவில்லை. இருவர் எதிர் எதிர் நின்று உரலில் இடிக்கும்பொழுது தாளகதியோடு இவை அமையவேண்டும். இல்லாவிட்டால் இரண்டு உலக்கைகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலை ஏற்படும். எனவே, பொற்சுண்ணத்தை மட்டும் தாளகதியில் அமைந்த பாடலாகப் பாடியுள்ளார். தெள்ளேணத்தில் தொடங்கி உந்தியார்வரை பாடி வருகின்ற இப்பெண்கள் நல்ல பருவ வளர்ச்சி