பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 €. திருவாசகம் சில சிந்தனைகள்-5 அடைந்தபொழுது என்ன பாடுகிறார்கள் தெரியுமா? என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க (173) என்றும், நின் அடியார் தாள் பணிவோம் அன்னவரே எங்கணவர் ஆவார், அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்’ (163) என்றும் பாடும் அளவிற்கு அந்தச் சிறுமிகள் வளர்ச்சியடைந்துவிட்டனர். இந்தச் சிறுமியரின் மனவளர்ச்சி சரியானமுறையில் சென்றுள்ளது என்பதை அறியத் திருவெம்பாவையில் வரும் மேலே காட்டப்பெற்ற இரண்டு தொடர்கள்போக, மற்றொரு வளர்ச்சிப் புதுமையையும் அடிகளார் காட்டுகிறார். இவர்கள் வளர்ச்சி செம்மையாக அமைந்தமையால் ஏனையோர் காணமுடியாத இரு உண்மைகளை அந்த இளவயதிலேயே கண்டுவிட்டனர். முதலாவது, "செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக ஆயிற்று என்பதை உணர்ந்ததாகும். வளர்ச்சியில் இது ஒரு படி இத்தோடு நிற்கவில்லை. இறைவன் இங்கு நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி, நம்தம்மைக் கோதாட்டி, செங்கமலப் பொற்பாதம் தந்தருள வருகின்றான் என்பதை உணர்ந்ததே இரண்டாவது உண்மையாகும். அம்மானை ஆடத் தொடங்கிய ஆறு வயதுச் சிறுமி இப்போது அடைந்துள்ள வளர்ச்சி இமாலய வளர்ச்சியாகும். இப்படிப்பட்ட ஒருத்தியின் குடும்பம் எவ்வாறு அமைந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அவள் வாழும் ஊர் முழுவதையும் திருத்தும் ஆற்றலை இந்த ஒருத்தியே மேற்கொள்கிறாள். இப்படிப்பட்டவர்கள் நிறைதலால் தமிழகம் முழுவதும் சிறப்பெய்தி ஒரு குறிக்கோள்தன்மை பெற்ற சமுதாயமாக மாறும் என்ற எண்ணத்தில் மகளிர்க்காகவே நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை அடிகளார் பாடினார் என்று எண்ணத் தோன்றுகிறது.