பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக-வைப்புமுறை_319 விளையாட்டின் தொடக்கமாக அமைவது அம்மானை என்று கூறினோம். அது ஆறு வயதுச் சிறுமியர்க்குரியது என்றும் கூறினோம். அந்த வயதில் விளையாட்டில் ஈடுபடும்பொழுது கண்ணால் பார்க்கக்கூடிய சில காட்சிகள் குழந்தைகளைக் கவர்வது இயல்பு. இதனை அறிந்துகொண்ட அடிகளார் இருபது பாடல்களில் ஆறு பாடல்களைக் காட்சியில் முடியும்படியாகப் பாடியுள்ளார். அவையாவன: மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்’ (176) சிற்றம்பலம் மன்னும் ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்’ (179) 'கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்’ (182) 'ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்’ (184) வேதியனை ஐயாறமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்’ (187 அனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்’ (191) என்பனவாம். கருத்தால் ஒன்றைப் பற்றுவதைக் காட்டிலும் கண்ணால் கண்டு பற்றுவது குழந்தைகட்கு எளிது. ஆதலால்தான் இளஞ்சிறு மியர் விளையாட்டாகிய அம்மானை பற்றிய பாடல்கள் இறைவன் காட்சி பற்றிப் பல இடங்களில் பேசுகின்றன. இந்த முறையில் தொடங்கி வளர்கின்ற பெண்கள் நன்கு வளர்ந்த நிலையில் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே' (163) என்று பாடும் நிலைமையை அடைகின்றனர். சிறுவயதிலிருந்து அவர்கள் குதித்துக் கும்மாளமிட்ட குளம் இப்பொழுது எங்கள் பிராட்டி எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவாகக் காட்சியளிக்கிறது (167) 'ሲ இதுவரை கூறியவற்றால் 658 பாடல்களில் சிறுமியர், மகளிர் என்பவர் விளயாட்டுக்காக 163 பாடல்கள் ஏன் ஒதுக்கப்பெற்றன என்பதை அறியமுடிகின்றது. அந்த