பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருவாசகம் சில சிந்தனைகள்-5 கொண்ட கருணை காரணமாக, தம்மைச் சுழலிலிருந்து காப்பாற்றியதோடு அல்லாமல், தம் துயரத்தைப் போக்க வெளிப்பட்டுக் காட்சியும் தந்தான் என்கிறார். வெளிப்பட்டு நின்ற இச்செயல் எளிதில் நடைபெறாத ஒர் அற்புதம் என்பதை அப்பொழுதே அறிந்திருந்தால் பலர் வந்து கூடி இந்த அற்புதத்தில் பங்குகொள்ள அவர்களை அழைத்து இருப்பேன். அது இயலாமல் போய்விட்டதே என்றபடி, அடுத்துவரும் எட்டுப் பாடல்களிலும் காணப்படாத ஒரு சிறப்பு இந்த இரண்டு பாடல்களிலும் அமைந்திருப்பது அறிதற்குரியது. புறக்கண்களாலும் காணுமாறு அப்பொருள் வெளிப்பட்டு நின்றது என்பதே அச்சிறப்பு. 571. நடித்து மண்ணிடை பொய்யினைப் பல செய்து - நான் எனது எனும் மாயம் - கடித்த வாயிலே நின்று முன் வினை மிகக் கழறியே திரிவேனைப் பிடித்து முன் நின்று அப் பெரு மறை தேடிய அரும் பொருள் அடியேனை அடித்து அடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே 3 அடித்தடித்து அக்காரம் தீற்றுதல் என்ற முதுமொழி அடிகளார் காலத்திற்கு முன்னரே தமிழகத்தில் வழங்கியிருத்தல் வேண்டும். சர்க்கரை என்ற பொருளையுடையது அக்காரம் என்ற சொல். உண்பவருக்கு இன்பத்தைத் தருதலால் அதனை உண்ணத் தொடங்கியவர் எளிதில் அதனை விட்டுவிட மாட்டார். ஒரோ வழி விட்டாலும் மறுபடியும் அது எங்கே கிடைக்குமென்ற நினைவிலேயே சுற்றித்திரிவர். அப்படியிருக்க ஒருவரை அடித்து அக்காரம் தீற்ற வேண்டிய (ஊட்டவேண்டிய) தேவை என்ன? • உயிர்கட்குரிய ஒருசில தனிப்பண்புகளை நினைவுகூரும் முறையில் அமைந்துள்ளது இம்முதுமொழி.