பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380-திருவாசகம் சில சிந்தனைகள் 5 விளையாட்டையும்கூட ஆறு வகையாகப் பிரித்து, 6 வயதுச் சிறுமிகள் தொடங்கி 18வயதுக் குமரிவரை படிப்படியாக உயர்த்திச் செல்கிறார். இத்தகைய வளர்ச்சியைப் பெற்று இறைவன் இல்லங்கள் தோறும் எழுந்தருள்கிறான் என்னும் உணர்வைப் பெண்கள் பெற்றுவிடுகிறார்கள். இவர்களை மணந்து கொள்கிற ஆண்களோ அடியார்களாக இருக்கின்றார்கள். குறிக்கோள்தன்மை பெற்ற ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்து அமைந்த குடும்பம் இது. இதுபோன்ற [ Ιόι) குடும்பங்கள் திருப்பெருந்துறையைச் சுற்றி அமைந்துள்ளன. எனவே, இவர்கள் அனைவரும் விடியற்காலை நேரத்தில் திருக்கோயிலைச் சென்று அடைகின்றனர். அவர்களுள்தான் எத்தனை வகை! 'பிணைமலர்க் கையினர் ஒரு பால், தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால், சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒரு பால், இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால், தோத்திரம் இயம்பினர் ஒரு பால் (37) என்ற முறையில் அலைமோதித் திரண்டு செல்லும் அக்கூட்டம் திருப்பெருந்துறையானைப் பள்ளியெழுப்புகின்றது. ஆண்களும் பெண்களுமாக இவ்வளவு பெரிய கூட்டம் ஒர் ஊரில் நிறைந்துள்ளது என்றால் அது திடீரென்று தோன்றியிருக்க முடியாது. இளவயதிலிருந்தே இப்பயிற்சியைப் பெற்று வளர்க்கின்றவர்களே திருக்கோயிலில் உள்சென்று துவள்தல், தொழுதல், அழுதல் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். அம்மானை விளையாட்டில் தொடங்கிய சிறுமியர், அடிகளார் கற்பித்த விளையாட்டுக்களில் ஈடுபட்டு, அறிவு முதிர்ச்சி பெற்று சாழல் விளையாட்டில் வினாவிடை மூலம் அறிவை வளர்த்துக்கொள்கின்றனர். அந்தவினா விடைக்குப் பிறகு இறைவனுடைய பேராற்றலை அறிய உந்தீபற என்று முடியும் பாடல்களில் ஈடுபடுகின்றனர்.