பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை 381 அறிவு வளர்ச்சி ஆன்மீக வளர்ச்சி என்ற இரண்டும் பெற்ற நிலையில் கூடிநின்று விளையாடியதுபோக கூடிநின்று அவன் பெருமைகளைப் பேசிக்கொண்டு வீதிவலம் செய்யும் நிலைமைக்கு வளர்கின்றனர். அந்த வளர்ச்சியின் முத்தாய்ப்புத்தான் திருப்பள்ளியெழுச்சியாகக் காட்சியளிக்கிறது. VI. ஆண்டுகொண்ட அதிசயம் அடுத்துள்ள தலைப்பு ஆண்டுகொண்ட அதிசயம் என்பதாகும். இத்தலைப்பில் நான்கு பதிகங்கள் இடம் பெறுகின்றன. அவையாவன: 1. அதிசயப்பத்து (26) 2. அற்புதப் பத்து (4) 3. கோயில் திருப்பதிகம் (22) 4. திருவெண்பா (47) இந்த அமைப்பு முறைக்கு ஒரு காரணம் உண்டு. இதில் முதற்கூறிய மூன்று பதிகங்களும் ஆண்டுகொண்ட நிகழ்ச்சியில் அடுத்து அடுத்து நடைபெற்றவைபற்றிக் கூறும் பதிகங்களாகும். அடுத்து அடுத்து என்று கூறியதாலும் மூன்று பதிகங்களாக இருப்பதாலும் இவை கால இடையீடு பெற்று நிகழ்ந்தவை போலும் என்று யாரும் கருதிவிடவேண்டா. இதில் கூறப்பெற்ற நிகழ்ச்சிகள் சில விநாடிகளுள் நிகழ்ந்தவையாகும். அவை நிகழும்பொழுது அடிகளார் ஆனந்த சாகரத்தில் மூழ்கி, தான் என்ற நினைவேயில்லாமல் இறையனுபவத்தில் துளையமாடிக்கொண்டிருந்தார். இது நிகழ்ந்து சில காலம் கழிந்த பின்னரே, இப்பதிகங்கள் பாடப்பெற்றிருக்க வேண்டும். ஆனந்தத்தில் திளைக்கும்பொழுது பாட்டு வெளிப்படுவதில்லை.