பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382-திருவாசகம் சில சிந்தனைகள்-5 எனவேதான், சில காலம் கழித்து அந்த அனுபவத்தையும் அதனால் பெற்ற பயனையும் அது நிகழ்ந்த வரிசைக் கிரமத்தையும் எண்ணிப் பார்க்கும்பொழுது அவை பாடலாய் வெளிப்படுகின்றன. குதிரைமேல் ஏறிவந்த திருவாதவூரர் முதலில் கண்டது குருநாதரைத்தான். அடுத்துக் கண்டது குருநாதரின் திருவடிகளையேயாகும். அடுத்து நிகழ்ந்தது அடியார் கூட்டத்திடை இருக்கச்செய்தது ஆகும். எந்தக் காரணத்தாலோ கோயில் மூத்த திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களிலும் அதிசயப் பத்தின் பத்துப் பாடல்களிலும் தனித்தனியாகப் பல்வேறு இடங்களிலும் அடியார் கூட்டத்திடை இருந்த சிறப்பை விடாது பாடிவருகின்றார். 'அடியார் கூட்டத்திடை இருக்கும் இந்த வாய்ப்புத் தமது தகுதி காரணமாகவோ யதேச்சையாகவோ கிடைத்த ஒன்று அன்று குருநாதர் ஆட்கொண்டதால்தான் இது கிடைத்தது என்ற நினைவும் நன்றிப் பெருக்கும் அவரை விட்டு நீங்கவேயில்லை. ஆகவேதான் அதிசயப் பத்தின் பத்துப் பாடல்களிலும் 'அடியரில் கூட்டிய அதிசயம் என்றே பாடிச் செல்கிறார். அப்படிப் பாட நினைத்தபொழுதே இரண்டு வகை எண்ண ஓட்டங்கள் அவர் மனத்திடை ஒடுகின்றன. தாம் இருந்த இருப்பு, தம் மனம் இருந்த நிலை, தாம் வாழ்ந்த வாழ்க்கை இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன. இந்த நினைவின் முடிவில் அடியார் கூட்டத்திடை இருக்கச் செய்த நிலை நினைவிற்கு வருகின்றது. ஒன்றுக்கொன்று முற்றிலும் பொருந்தாத முரண்பட்ட நிலைகள் அல்லவா இவை: இரத்த சோகை, பசியின்மை வயிற்றுக் கோளாறு என்பவற்றில் நீண்ட காலமாக உழன்றுகொண்டிருக்கும் ஒருவன் திடீரென்று எழுந்து பெரிய தலைவாழை இலையின் முன்னே அமர்ந்து