பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_383 பலப்பல காய்கறிகளோடு, வடை பாயசம் முதலியவற்றோடு சர்க்கரைப் பொங்கலையும் உண்டான் என்றால், இது எப்படி முடியும்? மேலே குறித்த நோய்களை உடையவன் ஒரு குவளைக் கஞ்சியை உட்கொள்வதே பெரிய காரியம் என்றுதான் நாம் நினைக்கின்றோம். ஆனால், உண்மையில் நிகழ்ந்தது என்ன? அந்த நோயாளி மாபெரும் விருந்தை உண்டது உண்மை. இத்தகைய நோய் உடையவன் உண்ணவே முடியாது என்றுதானே நாம் நினைப்போம்? ஆனால், அதற்கு முற்றிலும் மாறான ஒரு நிகழ்ச்சி கண்ணெதிரே நடந்தால் அது அதிசயம் என்று கூறாமல் வேறு என்ன என்று கூறுவது? அதனைத்தான் அடிகளார் பாடுகிறார். தம்முடைய பழைய வாழ்க்கைமுறையை, மனநிலையை, இதோ பேசுகிறார்: - I} நீதியாவன : யாவையும் நினைக்கிலேன் நினைப்பவரொடும் கூடேன் (429) - - 2) பரவுவார் அவர்பாடு சென்று அணைகிலேன் பன்மலர் பறித்து ஏத்தேன் (432) 3) எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும். நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடு (4.33 - என்பவையாம் அவை, - மேலே காட்டியவை மூன்றும் செய்யவேண்டியதைச் செய்யாதிருந்தமையைக் குறிக்கும். இவற்றைச் செய்யாமல் இருந்தாலே அருநரகிடை விழுவது உறுதியாகும். ஆனால் இவற்றோடு நிற்கவில்லை அவர் செய்யாதன ஒரு புறமிருக்க, தாம் செய்தவை என்ன என்று இதோ கூறுகிறார்: 1) மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேன் (428) 2) குரவுவார் குழலார் திறத்தே நின்று குடிகெடுகின்றேன் (432)