பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384--திருவாசகம் சில சிந்தனைகள் 5 இப்படி வாழ்ந்தால் என்ன கிடைக்கும் என்பதை அடிகளாரே பேசுகிறார்: 1) பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதி. இடர்க்கடல் சுழித்தலைப் படுவேன் (484) 2 இருள் திணிந்து எழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் இது இத்தைப் பொருளெனக் களித்து அருநரகத்திடை விழப்புகுகின்றேன் (437) இப்படிப்பட்ட ஒருவர் அருநரகிடை வீழ்தல் உறுதி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ஆனால், நடந்தது என்ன? இத்தகைய ஒருவரைப் பெருந்துறை நாயகன் தன் அடியரில் அல்லவா கூட்டினான்? இதை அதிசயம் என்று சொல்லாமல் வேறு என்ன என்று கூறுவது? சும்மாவா அடியரில் கூட்டினான்? முதலில் ஆண்டுகொண்டு, அடுத்து அல்லவா தம் அடியரில் கூட்டினான்? இது அதிசயத்தின் மேல் அதிசயம். ஆண்டுகொண்டதால் விளைந்த நன்மைகளைக் கூறும் இப்பதிகத்தை இத்தொகுப்பில் முதலாவதாக வைத்துள்ளோம். அடுத்து வைக்கப்பெறுவது அற்புதப் பத்தாகும். தம்மை ஒத்த ஒருவரை ஆண்டுகொண்டதும், அடியரில் கூட்டியதும் அதிசயம் என்று கூறிய அடிகளார், அடுத்து ஓர் அற்புதத்தையும் கூறுகிறார். மானிட வடிவில் இருந்த குருநாதர் அடிகளாரை அடியரிற் கூட்டினார். அடியார்களிடையே அமர்ந்திருந்த அடிகளார் தமக்கு இந்தப் பேருதவியைச் செய்த குருநாதரை நன்றிப்பெருக்கோடு பார்த்து மகிழ்கிறார். மானிட வடிவுடன் குருந்த மரத்தடியே அமர்ந்திருந்த குருநாதர் என்ன செய்தார் தெரியுமா! 569ஆம் பாடலின் பின்னிரண்டு அடிகளை மறுபடியும் பார்க்க வேண்டும். 'பொய்யெலாம் விடத் திருவருள் தந்துதன் பொன்னடி இணைகாட்டி, மெய்யனாய், வெளிகாட்டி முன் நின்றதோர்