பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_385 அற்புதம் என்று பாடியுள்ளாரே! இதன் பொருள் என்ன? வெளிகாட்டி என்பது 'முப்பாழும் தாண்டி நிற்கும் அப்பாழை, பரவெளியைக் காட்டி' என்ற பொருளைத் தரும். ‘மெய்யனாய்’ என்ற அடைமொழி எதற்கு? கருத்தளவில்மட்டும் கருதக்கூடிய சத்தியம் அல்லது மெய் என்பதற்கு உருவம் இருக்கமுடியாது. கருதுபொருளாக மட்டும் இருக்கக்கூடிய ஒன்றைக் காட்சிப் பொருளாகவும் மாற்றக்கூடியவன் இறைவன் ஒருவனே ஆவான். அதனையே அடிகளார் ‘மெய்யனாய்’ என்று பாடுகிறார். குருநாதர் வடிவினுள் அம்மையப்பன் வடிவினையும் தில்லைக்கூத்தன் வடிவினையும் கண்டாரே, அதைத்தான் இவர் சொல்கிறாரா என்றால், இல்லை என்றுதான் கூறவேண்டும். நாம ரூபமற்ற அந்தப் பரம்பொருள் குருநாதர் வடிவத்தையும் அம்மையப்பன் வடிவத்தையும் ஏற்றுக்கொண்டு நிற்பது உண்மைதான். ஆனால், அடிகளார். அவ்வடிவங்களை இங்கே குறிக்கவில்லை என்று ஊகிக்க இடம் உண்டு. அப்படியானால் வெளி காட்டி நின்றது யார்? என்ன வடிவுடன் நின்றான்? இந்த இரண்டு வினாக்களுக்கும் அடிகளார் விடை கூறவில்லை. ‘மெய்யனாய் வெளிகாட்டி நின்றது என்று கூறினாரே தவிர, அது யார் என்றோ எந்த வடிவுடன் நின்றான் என்றோ இந்த அருள் ஞானி விளக்கிக் கூறவில்லை. இறையுணர்வின் அதீத நிலையில் கிடைத்த பரவெளிக் காட்சியை நாம் பேசும் சொற்களால் கூறமுடியாது என்ற கருத்திற்போலும் விளக்கம் எதுவும் கூறாமல் மெய்யனாய் வெளிகாட்டி நின்றது அற்புதம் என்று கூறிவிட்டார். இவ்வாறு கூறிநிறுத்துவதில் அடிகளாருக்கே அமைதி ஏற்படவில்லைப் போலும். தம்முடைய பாடல்களாகிய பரா அமுதை மக்களுக்குத் தரவேண்டும் என்று கருதித்தானே குருநாதர் இவரை விட்டுச் சென்றார்: