பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386-திருவாசகம் சில: சிந்தனைகள்-5 அப்படியானால், சொற்களால் விளக்க முடியாத ஒன்றை எப்படிச் சொற்களால் விளங்கவைப்பது? விளக்க முடியாதது என்பதை முதற்பாடலில் கூறிவிட்டார். இரண்டாவது பாடலில்(570) நம்மாட்டுக் கொண்ட இரக்கம் காரணமாக விளக்கமுடியாததை விளக்க முயல்கிறார். நாம ரூபம் கடந்த அவனை விளங்கிக்கொள்ள முடியாதேனும் ஏதோ ஒரு முறையில் விளக்க முற்படுகிறார். அறிந்ததைக் கொண்டு அறியாததை விளக்கல் என்ற பழக்கம் இந்நாட்டில் தொன்றுதொட்டே இருந்துவருகின்றது. அந்த முறையில், அறிந்த ஒரு சொல்லை. இரண்டாவது பாடலில் பயன்படுத்துகிறார் முதற்பாடலில் இன்னார் என்று கூறமுடியாத ஒரு பொருளை இரண்டாவது பாடலில் நாம் அனைவரும் அறிந்த, வேந்தன்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் விளக்குகிறார். வேந்தன் என்ற சொல்லைக் கேட்டவுடன் தலைவன் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் தோன்றுமல்லவா? அந்த எண்ணத்தைத் தோற்றுவிக்கவே காணுமாறு வெளியே நின்ற பொருளை வேந்தன் என்ற சொல்மூலம் அறிவிக்க விரும்புகிறார். இந்த இரண்டு பாடல்களிலும் அற்புதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். நாம ரூபத்தால் குறிக்கப்படாத அந்தப் பொருளும் நாம ரூபமுடைய வேந்தன் என்பவனும் எளிதில் வெளிப்பட்டுக் காட்சி தருவதில்லை. அப்படிக் காட்சி தந்தால்-அதுவும் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத முறையில் காட்சி தந்தால்- அதனை அற்புதம் என்ற சொல்லால் குறிப்பதில் தவறில்லை. அடுத்து நிற்பது 'சிலம்பவை சிலம்பிட அருந்துணைவனாய் ஆண்டு கொண்டதாகும். இதிலும் ஒர் அற்புதம் உண்டு. நாம ரூபமற்ற ஒரு பொருளை அருந்துணைவனாய் இருந்து ஆண்டுகொண்டான் என்று கூறினால், அதனை எப்படி அறிவது? ஒரு துணைவன்