பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_381 என்றால், அவனைக் காணவும் கையால் தொடவும்கூடிய நெருங்கி நிற்கும் நிலையில் அல்லவா அவன் இருத்தல் வேண்டும்? ஆனால், இவை ஒன்றும் இல்லாவிடினும் வழியோடு செல்பவனுக்கு மற்றொரு துணை இருத்தல் கூடும். இதனை அறிவிக்க ஏதாவது ஒர் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தால் துணை உள்ளது என்ற தென்பு மனத்திடைப் பிறக்கும். இந்த அருந்துணைவன் காட்சிக்கும் தொடு உணர்ச்சிக்கும் அப்பாற்பட்டவனாயினும் தான் துணையாக இருப்பதை எப்படித் தெரிவிக்கிறான் தெரியுமா? தான் அணிந்திருக்கும் சிலம்பின் ஒசையைப் பிறர் கேட்குமாறு ஓயாது ஒலிக்கிறான். ஆதலின் கண்ணால் காணாவிடினும் ஒரு துணை உள்ளது என்ற தென்பு மனத்திடைப் பிறக்குமாறு செய்கிறான். இந்தக் கருத்தையே சிலம்பவை சிலம்பிட என்று பாடுகிறார். இறைவனால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் புதுமையான வழியை அற்புதம் என்று சொல்கிறார் அடிகளார். 'நீக்க முடியாத சில எண்ணங்கள் என் மனத்திடை நிறைந்து நின்றன. அவை, மாடு சுற்றம் மற்றுள போகம் மங்கையர் கூட்டம் என்பனவாம். இவை நிறைந்து நிற்கையிலேயே தன் மென்மலர்க் கழல் காட்டி (என்னை) ஆடுவித்து என் அகம்புகுந்து ஆண்டது அற்புதமல்லவா? (573) என்கிறார். சிவபூசையில் ஈடுபடவேண்டிய நேரத்தில் மங்கையர் மார்பிடைக் கிடந்த தம்மை ஆண்டது ஒர் அற்புதம் என்கிறார்:575). - அதிசயப் பத்தைப் போலவே அற்புதப் பத்திலும் மூன்றாம்(57) எட்டாம்(576) பாடல்கள் நீங்கலாக எஞ்சிய எட்டுப் பாடல்களிலும் தையலார் தொடர்பையே பேசுகின்றார். இந்த வகையில் பொழுதைக் கழித்த தம்மை ஆண்டுகொண்டதை அற்புதம் என்று கூறுவதில் வியப்பு ஒன்றுமில்லை. :