பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 திருவாசகம் சில சிந்தனைகள்-5 இத்தொகுதியில் மூன்றாவதாக உள்ளது கோயில் திருப்பதிகமாகும். கோயில் என்று அழைக்கப்படும் தில்லை பற்றிய எச்செய்தியும் இப்பதிகத்தில் இல்லை. அதற்குப் பதிலாகத் திருப்பெருந்துறை நிகழ்ச்சியே பத்துப் பாடல்களிலும் இடம்பெறுகிறது. கோயில் திருப்பதிகம் என்ற இப்பதிகம் திருப்பெருந்துறை நிகழ்ச்சியையே சுற்றிச் சுற்றி வந்தாலும் அந்த நிகழ்ச்சி நடைபெற்ற உடனேயோ அல்லது சில காலம் கழித்தோ பாடியது என்று நினைக்க மனம் இடம் தரவில்லை. அந்த நிகழ்ச்சியால் திருவாதவூரர் மணிவாசகராக மாறி இறையனுபவத்தில் தோய்ந்து துளையமாடிய பின்னர் மனத்தில் தோன்றிய உறுதிப் பாட்டைத் திருச்சதகம் முதலான பல பதிகங்களில் பாடியுள்ளதை முன்னரே கண்டோம். ஆண்டுகொண்டதன் விளைவுதான் இந்த மனஉறுதியும் வளர்ச்சியும் என்பதை அடிகளார். நன்றாக அறிந்திருந்தார். நாட்கள் செல்லச் செல்ல, அடிக்கடி இறையனுபவத்தில் தோய்ந்து எழும் மனநிலை வளர்ந்து கொண்டே வந்திருக்கவேண்டும். நல்ல வளர்ச்சியை அடைந்த பிறகுகூட ஒரோவழி பழமையை நினைந்துபார்க்கும் இயல்பு மனத்திற்கு உண்டு. அந்த இயல்பின் அடிப்படையில் என்ற்ோ ஒரு நாள் அந்நிகழ்ச்சியை நினைந்து பாடியதாகும் இப்பதிகம். அவன் ஆண்டுகொண்டதை எத்தனைமுறை நினைந்தாலும், அந்த நிகழ்ச்சி நடந்து எத்தனை காலம் ஆனாலும் ஆண்டு கொண்டதை நினைக்கும் பொழுதெல்லாம் அவரையும் அறியாமல் ஒரு வியப்பு மனத்திடைத் தோன்றுகிறது. “மாறிநின்று'(388) என்று தொடங்கும் முதற்பாடலில் பொறிபுலன்களை அடைத்து ஆண்டு கொண்டமையைப் பேசுகிறார். அப்படிப் பேசும்பொழுதேகூட ஒரு புதிய விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். என்னுள் ஊறிநின்று