பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக-வைப்புமுறை_389 எழுபரஞ்சோதி” என்று விளித்தவர், திடீரென்று 'காணவந்தருளாய் என்று பாடுவதன் நோக்கமென்ன? காணவந்தருளாய் என்பது எதிரே வருதலையே குறிக்கும். சோதி என்று விளித்ததால் அது எல்லாத் திசைகளிலும் வெளிப்படுவது என்பது தெளிவு. உள் எழுபரஞ்சோதி என்றதால் உள்ளத்தின் உள்ளே தோன்றுகின்ற பரஞ்சோதி என்றாராயிற்று. அப்படி உள்ளே எழும் ஒன்றை உணரமுடியுமே தவிரக் காணமுடியாது. அப்படியிருக்க 'காணவந்தருளாய் என்பது ஏதோ ஒரு நிகழ்ச்சியை மீண்டும் காணவிரும்புகிறார் என்ற பொருளைத்தான் குறிக்கிறது. அதாவது திருப்பெருந்துறையில் குருநாதராக எழுந்தருளியவரும் இப்போது உள்ளே ஒளி வடிவாக இருப்பவரும் ஒருவர்தான் என்பதை உணர்ந்தாலும் மறுபடியும் அந்தச் சோதி, குருநாதர் வடிவுடன் வெளிப்பட்டுப் புறக்கண்கள் காணுமாறு எதிரே வரவேண்டும் என்ற புதிய விருப்பத்தைத் தெரிவிக்கின்றார். ஆண்டுகொண்டு பன்னாட்கள் ஆகிவிட்டன; பல இறையனுபவங்களைப் பெற்றாகிவிட்டது; என்றாலும் குருநாதர் காட்சியளித்த முதல் நாள் அனுபவத்தை மீண்டும் பெறவிரும்புவது ஒரு புதுமையாகும். சாதாரணச் சுடர் புற இருளைப் போக்கும். பொய்யாகிய அகஇருளைப் போக்க வேண்டுமானால் அந்தச் சுடர் ஏனைய சுடரினும் மாறுபட்டதாக இருக்க வேண்டும். அப்படியானால் அந்தச் சுடரை எப்படி அடையாளம் காண்பது? அதனைக் குறிக்கவே சுடர் என்பதற்குமுன் மெய் என்ற அடைமொழியைப் பெய்து ‘மெய்ச்சுடர் (390) என்றார். திருப்பெருந்துறையில் குருநாதர் திருவடிதீட்சை செய்ததைப் புறத்தே நின்றவர் பலர்கூடக் கண்டிருக்கலாம். அதன்பிறகு, திருவாதவூரர் என்ற அமைச்சர் எல்லாவற்றையும் துறந்து ஆண்டியாகித் திரிந்த புற