பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 திருவாசகம்-சில சிந்தனைகள்-5 வேறுபாட்டையும் பலர் கண்டிருக்கலாம். புறத்தே உள்ள மக்களைப் பொறுத்தமட்டில் திருவடி தீட்சையின் பயனை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆண்டுகொண்டதால் விளைந்த பயனை ஆட்கொள்ளப்பட்டவரே பேசுகிறார். 'அன்பினால் அடியேன் ஆவியோடுஆக்கை ஆனந்தமாய்க் கசிந்து உருக, என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் (389) என்பதே அவருடைய விளக்கமாகும். ஆட்கொள்ளப்பெற்றபின் மனித வாழ்க்கையில் காணமுடியாத ஒர் அமைதி கிட்டியது என்பதை 'உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே’(391) என்ற சொற்களால் வெளிப்படுத்துகிறார். ஆட்கொள்ளப்பெற்றதில் ஒரு புதிய அனுபவம் கிட்டுகிறது. அதனை 'இறைவனே நீ என் உடல் இடங்கொண்டாய்” (392) என்று பேசுகிறார். ஆண்டுகொண்டதில் மற்றோர் புதிய அனுபவம் 393 ஆம் பாடலில் பேசப் பெறுகிறது. நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீகால் ஆய் அவை அல்லையாய் ஆங்கே, கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்ணுறக் கண்டுகொண்டு இன்றே என்பதே அது. அதாவது ஐம்பெரும் பூதங்களிலும் ஒருவனே கரந்து நிற்கின்றான். ஐம்பெரும் பூதங்களிற்கூட நிலம் நீர் தீ இவை மூன்றும் போக எஞ்சிய இரண்டையும் கண்ணால் காண்பது இயலாத காரியம். இந்த இரண்டையுமே காணமுடியாதென்றால் இவற்றுள் கலந்து நிற்கின்ற ஒருவனை எவ்வாறு காணமுடியும்? இறையனுபவம் முதிர்ந்த நிலையில் அந்த ஒருவனை உள்ளத்தில் உணரலாம். ஆனால், அடிகளார் என்ன பாடுகிறார்? ஐம்பெரும் பூதங்களிலும் கரந்த உருவுடைய ஒருவனை உள்ளத்தில் உணர்ந்தேன் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? அவ்வாறில்லாமல், உன்னைக் கண்ணுறக் கண்டுகொண்டு இன்றே களித்தனன் என்றல்லவா