பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392- திருவாசகம் சில சிந்தனைகள்-5 அதாவது ஆட்கொண்டவன் இலவசமாகத் தன்னைத் தந்துவிடவில்லை. ஒரு பண்ட்மாற்றுச் செய்துகொண்டுதான் தன்னைத் தந்தான் என்கிறார். கொண்டது என்தன்னை என்ற தொடரால் இவருடைய இடத்தில் எப்பொழுது அவன் புகுந்தானோ அதே நேரத்தில் அவன் இருந்த இடத்தில் இவர் புகுந்துவிட்டார். இப்படி ஒர் அற்புதமான நிகழ்ச்சி ஆண்டுகொண்டதால் விளைந்ததாகும். இப்பதிகத்தின் இரண்டாம் (389) பாடலில் நீ செய்த உபகாரத்திற்கு ஒரு கைம்மாறு செய்யக்கூடிய நிலையில் நான் இல்லையே' என்று வருந்திப் பாடிய அடிகளார் பதிகத்தின் பத்தாவது (397 பாடலில் அந்த நிலையை மாற்றிக்கொள்கிறார். இரண்டாம் பாடல் தோன்றுகின்ற நேரத்தில் ஆட்கொண்டவன் ஒருவன், ஆட்கொள்ளும் செயல் ஒன்று, ஆட்கொள்ளப்படுபவர் ஒருவர் என்று மூன்றாகப் பிரிந்து நின்ற காரணத்தால் ஆட்கொள்ளப்பெற்றவர் என்னால் கைம்மாறு செய்ய முடியவில்லையே’ என்று வருந்தினார். அந்த மூன்றில் இரண்டு இடம்மாறிவிட்டது. இப்பொழுது இவரில் புகுந்தவன் அவன் ஆதலால் அவனுக்குக் கைம்மாறு செய்ய முடியாது என்பதை, 'யான் இதற்கு (நீ என்னுள் புகுந்து தங்கியதற்கு கைம்மாறு செய்ய இயலாதாகையால் ‘இவன் ஓர் கைம்மாறு’ என்கிறார். இந்தப் பத்துப் பாடல்களில் ஆண்டுகொண்ட நிகழ்ச்சியும் அது விளைந்து பயன்தந்த முறையும் அழகாக எடுத்து இயம்பப் பெற்றுள்ளன. அடுத்துள்ள திருவெண்பாவில் மேலே குறிப்பிட்ட பத்துக்களைப்போல் இல்லாமல், குருநாதர் அருள் செய்ததைமட்டும் பேசுகிறார். எவ்வாறு அருள்செய்தார் என்பதையெல்லாம் திருவெண்பாவில் விளக்கமாகக் கூறியுள்ளார் அடிகளார். இவ்வளவு உபகாரம் செய்த அவனுக்கு எப்படி கைம்மாறு செய்யமுடியும்’ என்பதை