பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக-வைப்புமுறை_393 நினைத்தவுடன் அது இயலாது என்பதை உணர்ந்து பாடலில் தம்மை மறந்து, ஆர்க்கோ அரற்றுகோ (6.18) என்று பாடுகிறார். VII. உயிர் வர்க்கத்தை விளித்தல் இத்தொகுப்பில் பின்வரும் பதிகங்கள் இடம் பெறுகின்றன. 1) திருக்கோத்தும்பி (10) 2) குயிற்பத்து (18) உலகியலில் மனிதர்களுக்குரிய இயல்பு ஒன்றைப் பரக்கக் காணலாம். ஒரு மனிதன் மிக அதிகமாக நேசிப்பது தன்னைத்தான். இதனை நாவரசர் பெருமான் என்னில் யாரும் எனக்கு இனியார் இலை (திருமுறை-5:21-) என்று பாடிச்செல்கிறார். தன்னையே நேசிக்கும் மனிதன், அதிலிருந்து சற்று வளர்ந்து பிறரை நேசிக்கத் தொடங்கும் பொழுதும் தன்னை ஒத்த பிற மனிதர்களைத்தான் பெரிதும் நேசிக்கிறான். நாட்டு வரலாறுகள் என்ற பெயரில் இன்று வெளிவரும் நூல்கள் அனைத்தும் ஒவ்வொரு நாட்டின் மக்களைப்பற்றியனவே ஆகும். மக்களல்லாத விலங்கினங்கள், ஏனைய ஒரறிவு உயிர்கள் என்பவற்றைப் பற்றி எதுவும் பேசப்படுவதில்லை. இதன் காரணம் என்ன? சராசரி மனித வளர்ச்சி தன்னைத் தான் நேசித்தல், அடுத்தபடியாகத் தன்னை ஒத்த பிற மனிதர்களை நேசித்தல் என்பதோடு முடிந்துவிடுகிறது. அதையும் மீறிச்செல்லும் சிலர் தமக்குப் பயன்படும் ஆடு, மாடு நாய், குதிரை என்பவற்றை ஓரளவு நேசிக்கிறார்கள். ஆனால், இந்த நேசத்தின் அடிப்படையில் தன்னலம் மட்டுமே நிலைத்துள்ளது. இந்தச் சராசரி மனிதர்களிலிருந்து மிகமிக உயர்ந்து நின்று விளங்கும் அருளாளர்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஓரறிவு உயிர் முதல் ஐயறிவு உடைய விலங்குகள்