பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 திருவாசகம் சில சிந்தனைகள்-5 வரை, பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன் விண்மீன்கள் ஆகிய அனைத்தையும் சமமாகக் கருதி அவற்றிடத்தும் பேரன்பு செய்பவர்கள் இந்த அருளாளர்கள். இது முடியுமா என்று ஒரு வினாத் தோன்றும். அதற்கு ஒர் எளிதான விடை உண்டு. இவற்றை இனம் பிரித்து ஓரறிவு முதலாக ஐயறிவுவரை உள்ள விலங்குகள், கல், மண் தண்ணிர் என்றெல்லாம் இந்த அருளாளர்கள் பார்ப்பதில்லை. எல்லாவற்றையும் இறை சொரூபம் என்று அவர்கள் கருதியதால்தான் இது முடிந்தது. இத்தகைய அருளாளர்கள் எக்காலத்திலும் இருந்தனர்; இன்றும் உளர்; நாளையும் இருப்பர். ஆனால், இவர்களை இனங்கண்டுகொள்ளுதல் மிகமிகக் கடினமாகும்.அடிகளார் காலத்திற்கு ஒரு நூற்றாண்டுமுன்னர் வாழ்ந்த நம்மாழ்வார் இதே கருத்தை மண்ணை இருந்து துழாவி வாமனன் மண்ணிது'என்னும் (நாலாயிர 2447) என்றும், செய்யதோர் ஞாயிற்றைக்காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்’ (நாலாயிர:2448) என்றும் அறியும் செந் தீயைத் தழுவி அச்சுதன் என்னும், மெய்வேவாள்!" நலாயிர249) என்றும் பாடியுள்ளமை நோக்கத் தக்கது. நம் காலத்தில் வாழ்ந்த மகாகவி பாரதியார் 'காக்கை குருவி எங்கள் சாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ என்றும்,