பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக-வைப்புமுறை_395 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா என்றும் பாடியுள்ளமையும் நோக்கத்தக்கது. அருளாளர்கள் நிலை இது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்றாலும், இதில் ஒரு சிக்கலும் உள்ளது. வண்டையும் குயிலையும் பாடிய அடிகளாரைப் பித்தன் என்று உலகவர் பேசினர். இன்று, வானளாவப் புகழ்ந்தாலும் பாரதி வாழ்ந்த காலத்தில் அருளாளர்களுள் அவனும் ஒருவன் என்பதை யாரும் கண்டுகொள்ள வில்லை. அதற்குப் பதிலாக, பைத்தியம் என்றே அவனை ஏசினர். அருளாளர்களை அவர்கள் காலத்தில் இனம் கண்டுகொள்ளாமல் இருப்பது மனித சமுதாயத்தின் தனிஇயல்பாகும். தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை அடிகளார் காலத்தில் வாழ்ந்து, அவரைப் பைத்தியம் என்று சொன்ன நம் முன்னோர்களைப் போலவே ஒரு சிறிதும் வளர்ச்சியில்லாமல் இன்றுவரை நாம் உள்ளோம் என்றால், இதைவிடத் தனிச்சிறப்பு வேறு என்ன வேண்டும்! அடிகளாரைப் பொறுத்தவரை, திருவாதவூரராக வாழ்க்கையைத் தொடங்கியவர், மணிவாசகராக வளர்ச்சி பெற்று, ஒரு பழுத்த அருளாளராக மாறிவிடுகிறார். இந்த மாற்றம் நிலைபெற்றவுடன், அது எதனால் வந்தது என்று எண்ணிப்பார்க்கையில், சென்ற தொகுப்பில் காணப்பெறும் அதிசயப் பத்து, அற்புதப் பத்து, கோயில் திருப்பதிகம், திருவெண்பா ஆகியவற்றில் அந்த வளர்ச்சிக்குக் காரணத்தைக் காணமுடிகிறது. வளர்ந்துவிட்ட நிலையில் உயிரினங்களிடையே உள்ள வேறுபாடு மறைந்துவிடுகிறது. வண்டும் குயிலுங்கூட இறையனுபவத்திற்குப் பாத்திரமாகலாம் என்ற உண்மை