பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396-9-திருவாசகம் சில சிந்தனைகள்-5 பளிச்சிடுகிறது. பன்றிக்கு முலை கொடுத்தவன், வலைஞனாக வந்து மீன்வலை வீசியவன், கரிக்குருவிக்கு உபதேசம் செய்தவன், வண்டு குயில் என்பவற்றின் வேண்டுகோளை நிராகரித்துவிடுவானா, என்ன ? அவனுடைய பரங்கருனைத் தடங்கடலில் பன்றிக் குட்டிகளுக்கு இடம் இருப்பதுபோல, வண்டுக்கும் குயிலுக்குங்கூட இடமுள்ளது. அவன் எப்போதும் தயாராக உள்ளான்; அவன் உதவி தேவை என்பதை இச்சிற்றுயிர்கள் உணர்ந்துகொண்டு அவனை அழைத்தால், அவன் உடனே வருவான் என்பதுதான். திருக்கோத்தும்பி, குயிற்பத்து என்பவற்றின் அடிப்படையாகும். இது கருதியே, இவ்விரண்டு பதிகங்களும் ஆண்டுகொண்ட அதிசயத்திற்குப் பின்னர் வைக்கப்பெற்றுள்ளன. திருவாசகம் முழுவதிலும் மக்களையல்லாமல் ஏனை உயிரினங்களை விளித்துப் பாடும் பதிகங்கள் இரண்டு மட்டுமே உள்ளன. அவை திருக்கோத்தும்பி, குயிற்பத்து என்பவையாம். திருவாசகப் பதிகங்கள் பெரும்பாலானவற்றிற்குத் 'திருவைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பொருந்துமா பொருந்தாதா என்றுகூடப் பாராமல் திருவெண்பா, திருவார்த்தை என்று தலைப்புகள் வைத்ததுபோலத் திருக்கோத்தும்பி என்ற தலைப்பையும் வைத்துள்ளனர். வண்டு இனங்களுள் பெரிய உடலமைப்பும் உச்ச ஸ்தாயியில் ரீங்காரமிடும் இயல்பும் கொண்ட ஒருவகை வண்டினத்திற்கு அரச வண்டு என்று பெயரிட்டனர். அதுவே கோத்தும்பி ஆயிற்று. "வெண்பாவிற்குத் திரு சேர்த்தது போல, கோத்தும்பிக்கும் ஒரு திரு'வைச் சேர்த்தனர். தும்பியைத் தூதாக அனுப்புதல் இலக்கியத்தில் பயின்றுவரும் ஒன்றாகும். இதனைக் மனத்துட் கொண்ட