பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை_397 உரையாசிரியர் பலரும் திருக்கோத்தும்பிப் பதிகம் முழுவதும் தலைவி, வண்டைத் துதாக அனுப்பும் செய்தியைக் கூறுவதாகும் என்ற கருத்தில் உரை எழுதினர். 215ஆம் பாடல்முதல் 234ஆம் பாடல்வரை உள்ள இருபது பாடல்களில் 227, 233 ஆகிய இரண்டு பாடல்களைத் தவிர ஏனைய பாடல்களில் வண்டினைத் தூதாக அனுப்பும் செய்தி இடம்பெறவே இல்லை. அதற்கு மாறாக எல்லாப் பாடல்களும் அரசவண்டே! நீ சென்று அவன் புகழைப் பாடுவாயாக’ என்ற கருத்தில் 'சென்று தாய் கோத்தும்பி’ என்றே முடிகின்றன. இப்பாடல்களில் எங்கோ சென்றுகொண்டிருந்த தம்மை, பதவி முதலிய இன்பவேட்டையில் சுழன்றுகொண்டிருந்த தம்மைப் பெருந்துறை நாயகன் இழுத்துப் பிடித்து ஆட்கொண்ட சிறப்பைப் பல இடங்களில் பாடியுள்ளார். இதனையல்லாமல் கோயில் திருப்பதிகம், அதிசயப் பத்து, அற்புதப் பத்து என்ற பகுதிகளில் மிகமிக விரிவாகப் பாடியுள்ளார். அப்படிப் பாடிவரும் நிலையில் தம்மையும் ஒருபொருட்டாக மதித்து ஆட்கொண்ட பெருமான் இதே கருணையை ஐயறிவு உயிர்களுக்குக்கூடக் காட்டுவான் என்ற நினைவு தோன்றவே, கோத்தும்பிப் பதிகம் தோன்றுகிறது. இப்பதிகத்தைத் தொடங்கும்பொழுது தம்மைப் பற்றிய சிந்தனையில்லாமல் பூஏறு கோனும்’ என்று தொடங்கி எல்லாத் தெய்வங்களையும் வரிசைப்படுத்தி, இவர்கள் யாரும் அறியாத திருவடியைச் சென்று ஊதுவாயாக’ என்று பாடியுள்ளார். ஆனால் ‘வானவரும் தாம் அறியாச் சேவடி என்று நேரடி உதாரணம் எதுவுமில்லாமல் கூறினதால், அச்சேவடியைச் சென்று ஊதினால், தமக்கு என்ன பயன் கிட்டும் என்ற நினைவில் வண்டுகள் அடிகளார் கூற்றில் ஈடுபாடு கொள்ளவில்லை போலும் ஒரு வினாடியில் இதனை உணர்ந்துகொண்ட அடிகளார் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். உயிர்கள் ஒன்றில் ஈடுபட